உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிணறு, பண்ணை குட்டை அமைக்க விவசாயிகள் பதிவு செய்யலாம்

கிணறு, பண்ணை குட்டை அமைக்க விவசாயிகள் பதிவு செய்யலாம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாயிகளின் நிலங்களில், திறந்தவெளி கிணறு, பண்ணைக்குட்டை உள்ளிட்ட பல்வேறு பணிகள் இலவசமாக செய்து தரப்படவுள்ளன. இதற்கு விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்.சிறு, குறு விவசாயி களின் நிலங்களில், மண்வரப்பு, கல்வரப்பு அமைத்தல், திறந்தவெளி கிணறு அமைத்தல், பண்ணைக்குட்டை அமைத்தல், பழமரக்கன்று நடுதல்.மீன் உலர்கலம் அமைத்தல், மண்புழு உர குழி அமைத்தல், அசோலா உர தொட்டி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் இலவசமாக செய்து தரப்படவுள்ளன.இத்திட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.பயன்பெற விரும்பும் விவசாயிகள், வேளாண் விரிவாக்க மையங்களை அணுக வேண்டும். அங்கு தங்கள் பெயர், மொபைல் போன், விவசாய நிலத்தின் சர்வே எண், முகவரி உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என, வேளாண்துறை கூறியுள்ளது.

5,000 சிறு குளங்கள்

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 5,000 புதிய சிறு குளங்கள், 250 கோடி ரூபாயில் அமைக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு உள்ளன. அதன் விபரம்: ஒரு கிராம ஊராட்சியில், குறைந்தது ஒரு புதிய குளம் உருவாக்கலாம். நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ள பகுதிகளில், ஒன்றுக்கும் மேற்பட்ட குளங்களை உருவாக்கலாம் ஏரி மற்றும் நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில், புதிய குளம் அமைப்பதாக இருந்தால், அப்பகுதி, 10 ஆண்டுகளுக்கு மேலாக, துார் வாரப்படாத பகுதியாக இருக்க வேண்டும். சமுதாய குளங்களை உருவாக்கலாம். ஆனால், புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளக்கூடாது புதிய குளங்களை உருவாக்கும் போது, அவற்றுக்கு தண்ணீர் வருவதற்கு, புதிய கால்வாய்களை அமைக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Vasudeva
ஆக 06, 2024 08:49

நல்ல திட்டம்தான், ஆனால் 100நாள் திட்டம் மூலம் செயல்படுத்த நினைப்பது வேடிக்கை, as usual project on paper


Gopalkrishnan periaswamy
ஆக 05, 2024 20:01

அனைத்து விலைவாசி ஏற்றத்துக்கும் இந்த உழைப்பில்லா சோம்பேறி ஆக்கக்கூடிய திட்டங்களே காரணம்


SC Pugazh SC Pugazh
ஆக 04, 2024 14:01

கிணறு அமைக்கவில்லை..


கூமூட்டை
ஆக 04, 2024 13:20

எந்த செயலும் நல்லதாக இருந்தால் மட்டுமே அது நல்லது. மக்கள் சேவைகள் கடவுள் சேவை ஊழல் இல்லாத இருக்க வேண்டும்


Ravi,V
ஆக 04, 2024 13:04

அறிவிப்பு மட்டும் நல்ல தான் இருக்கு ஆனா மக்களை எந்த திட்டங்களும் சரியா போயி சேர்வதில்லை வெட்டியா இதெல்லாம் எதுக்கு


kalaivanan vanan
ஆக 04, 2024 11:15

10 மணிக்கு வேலை தொடங்கி 11.30 மணிக்கு நிழல் கண்ட இடங்களில் அமர்ந்து விடுகிறார்கள் இதனால் விவசாய வேலைகளுக்கு வர மறுக்கிறார்கள், இதில் யார் வயல் அருகாமையில் நீர் பாசன வாய்க்கால் இருக்கிறதோ அவர்கள் டீ வடை வாங்கி கொடுக்கனும்


aruna Ar
ஆக 04, 2024 10:32

கிணறு ரொம்ப பலதாய் கிடைக்கிறது ஒரு பண்ணை அமைக்க


John De cruz
ஆக 04, 2024 08:26

Good


Kasimani Baskaran
ஆக 04, 2024 06:20

இருக்கும் நீர்நிலைகளை தூர் வார துப்பில்லை - ஆனால் புதிதாக கிணறு தோண்டப்போகிறார்களாம்...


Thanaraja M C
ஆக 04, 2024 05:10

Yes sir give me water kinaru. Vattuthal 9843218607


இவன்
ஆக 04, 2024 05:55

இவனுங்க லுக்கு லஞ்சம் கொடுத்து அவனுங்க உடம்பு வெர்க்காம வேலை பாத்து முடிக்கிற துக்கு நீங்க சொந்த காசுல பண்ணிடலாம்


முக்கிய வீடியோ