| ADDED : ஜூலை 11, 2024 11:53 PM
சென்னை:வெளிநாடுகளில் கேரம், வாள் வீச்சு போட்டிகளில் பங்கேற்க உள்ள வீராங்கனையருக்கு, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, தமிழக சாம்பியன்ஸ் அறக்கட்டளை வாயிலாக நிதி வழங்கி உதவினார்.அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில், நவ., 10 முதல் 17ம் தேதி வரை உலக கேரம் போட்டி நடக்க உள்ளது. இதில் பங்கேற்க, தமிழகத்தை சேர்ந்த வீராங்கனையரான நாகஜோதி, காசிமா, மித்ரா மற்றும் பயிற்சியாளர் மரியா இருதயம் ஆகியோர் தேர்வாகி உள்ளனர். இவர்களின் செலவுக்காக, தலா 1.50 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை, தமிழக சாம்பியன்ஸ் அறக்கட்டளை வாயிலாக, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி நேற்று வழங்கினார்.மேலும், வரும் 16 முதல் 19ம் தேதி வரை நியூசிலாந்தில் நடக்க உள்ள ஜூனியர் காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க, ஜாய்ஸ் அஷிதாவுக்கு செலவு தொகையாக, 2 லட்சம் ரூபாய்காசோலை என, மொத்தம் 8 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை உதயநிதி வழங்கினார்.நிகழ்வில், விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி பங்கேற்றனர்.