உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தரை காற்றின் வேகம் 2 நாட்கள் அதிகரிக்கும்

தரை காற்றின் வேகம் 2 நாட்கள் அதிகரிக்கும்

சென்னை:'இன்றும், நாளையும் தரைக்காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடலோரப் பகுதிகளில் மூன்று நாட்களுக்கு சூறாவளி காற்று வீசும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.தமிழகத்தில் தென் மேற்கு பருவமழையின் தீவிரம் குறைந்துள்ளது. அதனால், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டும், லேசான மழை பெய்து வருகிறது.இந்நிலையில், 'மேற்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும்; சென்னையில் மாலை நேரங்களில் திடீர் மழைக்கு வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும், இன்றும் நாளையும், தமிழகத்தின் சில இடங்களில், தரைக்காற்றின் வேகம் மணிக்கு, 40 கி.மீ., வரை அதிகரிக்கும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில், 8 செ.மீ., மழை பெய்துள்ளது.வங்கக்கடலின் மத்திய பகுதி, வட மேற்கு, தெற்கு, வடக்கு ஆந்திரா, வடக்கு அந்தமான் பகுதிகள், அரபிக்கடலின் மத்திய, தெற்குப் பகுதிகள், கேரள, கர்நாடக கடலோரப் பகுதிகளில், மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும். எனவே, மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு, வரும், 28ம் தேதி வரை செல்ல வேண்டாம் என, வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை