மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
1 hour(s) ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
12 hour(s) ago
சென்னை:இம்மாதம் 30ல் ஓய்வு பெற உள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.சந்திரசேகரனுக்கு. நேற்று பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.நிகழ்ச்சியில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ''நான்கு ஆண்டுகளுக்கும் குறைவான காலமே நீதிபதியாக பணியாற்றிய ஜி.சந்திரசேகரன், 17,000த்துக்கு அதிகமான வழக்குகளை முடித்து வைத்துள்ளார்,'' என்றார்.நிகழ்ச்சியில் ஏற்புரை ஆற்றிய நீதிபதி ஜி.சந்திரசேகரன், ''நீதிபதியாக வேண்டும் என பலருக்கு ஆசை இருந்தாலும், ஒரு சிலருக்கே அந்த வாய்ப்பு கிடைக்கிறது. உயர் நீதிமன்ற நீதிபதியாக மன நிறைவுடனும், பெருமையுடனும் பணி ஓய்வு பெறுகிறேன்,'' என்றார்.நீதிபதி ஜி.சந்திரசேகரன் ஓய்வு பெற உள்ளதை அடுத்து, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 65 ஆக குறைந்து, காலியிடங்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்து உள்ளன. நீதிபதி ஜி.சந்திர சேகரன் நேற்று, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலாவுடன் அமர்ந்து வழக்குகளை விசாரித்தார். தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலாவும், இந்த மாதம் ஓய்வு பெறுகிறார்.
1 hour(s) ago | 1
11 hour(s) ago | 1
12 hour(s) ago