உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிலை திருட்டு தடுப்பு பிரிவின் பெயர் மாற்றம்?

சிலை திருட்டு தடுப்பு பிரிவின் பெயர் மாற்றம்?

நம் நாட்டின் கலாசாரம் மற்றும் பண்பாட்டை எடுத்துரைக்கும், 100 ஆண்டுகளான கலைப் பொருட்கள் மற்றும் சிலைகள் உள்ளிட்ட பொக்கிஷங்களை, பழங்காலத்திற்கு உரியவை என, இந்திய தொல்லியல் துறை நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி, 'பழங்கால பொருட்கள் மற்றும் கலை பொக்கிஷங்கள் சட்டம் - 1972'ன் கீழ், கலைப் பொருட்கள் மற்றும் சிலைகளை திருடுவோர், கடத்துவோர்; இது தொடர்பாக மறைமுக, நேரடி தொடர்பில் இருப்போரை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். பழங்கால பொருட்கள் மற்றும் கலை பொக்கி ஷங்கள் சட்டமானது, 100 ஆண்டுகளுக்குரிய நாணயம், சிற்பம், ஓவியம், கல்வெட்டு, கைவினைத் திறன், அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகள், அறநெறி நுால்கள், இலக்கியம், மதம் சார்ந்த கட்டுரைகள், வரலாற்று ஆவணங்களை திருடுவோர் மற்றும் கடத்தல் தொழிலில் ஈடுபடுவோர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது. அதன்படி செயல்பட்டும் வருகிறோம். நாங்கள் சிலைகளை மட்டுமே பாதுகாத்து வருவது போலவும், அது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவது போலவும், தகவல்கள் பரவி வருகின்றன. ஆகையால், சிலை திருட்டு தடுப்பு பிரிவின் பெயரை மாற்ற வேண்டும். அதில், கலை பொருட்கள் மற்றும் பொக்கிஷங்களை பாதுகாப்பது தொடர்பான வார்த்தைகள் இடம் பெற வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுத்துஉள்ளோம்.- சைலேஷ்குமார் யாதவ்டி.ஜி.பி., சிலை திருட்டு தடுப்பு பிரிவு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Dharmavaan
மே 27, 2024 16:09

இவன் பதவிக்கு வந்து கண்டுபிடித்த திருட்டு எத்தனை. கொண்டுவந்த இலைகள் எத்தனை எல்லாம் போயிற்று


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை