உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐ.ஜே.கே., கட்சியின் பொதுச்செயலர் ராஜினாமா

ஐ.ஜே.கே., கட்சியின் பொதுச்செயலர் ராஜினாமா

பெரம்பலுார்: இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் பெரம்பலுார் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று, அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயசீலன் தன் பதவியை ராஜினாமா செய்தார்.பெரம்பலுார் லோக்சபா தொகுதியில் பா.ஜ., கூட்டணி சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட ஐ.ஜே.கே., நிறுவனர் பாரிவேந்தர், தி.மு.க., அமைச்சர் நேருவின் மகன் அருண் நேருவிடம், 4 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதற்கு கட்சியினரின் செயல்பாடின்மை மற்றும் ஓட்டுக்கு பணம் உட்பட தேர்தல் செலவுகளுக்காக பாரிவேந்தர் கொடுத்த பணத்தை நிர்வாகிகள் சுருட்டிக் கொண்டதும் காரணமாக சொல்லப்பட்டது.இந்நிலையில், ஐ.ஜே.கே., நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. கூட்டத்துக்கு கட்சி நிறுவனர் பாரிவேந்தர் தலைமை வகித்தார். கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், பங்கேற்ற மாநில பொதுச்செயலர் ஜெயசீலன் பேசுகையில், 'பெரம்பலுார் லோக்சபா தொகுதி தேர்தலில், பாரிவேந்தர் தோல்வி அடைந்தார். இந்த தோல்விக்கு பொறுப்பேற்று என் கட்சி பதவியை ராஜினாமா செய்கிறேன்' என பேசினார்.இதை கட்சி நிறுவனர் பாரிவேந்தர், கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் ஏற்பதாக அறிவித்தனர்.பாரிவேந்தரின் தோல்விக்கு காரணமான நிர்வாகிகள் சிலர், ஜெயசீலனை போல தாங்கள் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விரைவில் நீக்கப்படலாம் அல்லது அவர்களாகவே கட்சியிலிருந்து ராஜினாமா செய்து விடுவர் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை