உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜெயகுமார் வாயில் நல்ல வார்த்தை வராது!

ஜெயகுமார் வாயில் நல்ல வார்த்தை வராது!

சென்னை:''படுதோல்வியில் இருந்து பாடம் கற்கவில்லை என்றால், எதுவும் செய்ய முடியாது,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:லோக்சபா தேர்தலில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ரத்தம் சிந்தி வளர்த்த கட்சி, படுதோல்வி அடைந்ததற்கு யார் காரணம் என்பது மக்களுக்கு தெரியும். லோக்சபா தேர்தலில் இரட்டை இலை, ஏழு லோக்சபா தொகுதிகளில், 'டிபாசிட்' இழந்துள்ளது; 13 தொகுதிகளில் மூன்றாம் இடத்தையும், இரண்டு இடங்களில் நான்காம் இடத்தையும் பிடித்துள்ளது. பொதுத் தேர்தல் உட்பட, தொடர்ந்து பத்து தேர்தல்களில், அ.தி.மு.க., வீழ்ச்சி அடைந்ததற்கு பழனிசாமி தான் காரணம். இந்த நிலை தொடரக் கூடாது என்பதற்காக, பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க., சக்திகளை இணைய வேண்டும் என, தொண்டர்கள் கூக்குரல் எழுப்புகின்றனர். மக்களும் இதே கருத்தை வலியுறுத்துகின்றனர்.இன்று இருக்கிற நிலையில், பொதுமக்கள் அபிப்ராயத்தை நாம் இழந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை. ஜெயகுமாருக்கு பதில் கூற தேவையில்லை. அவர் வாயில் நல்ல வார்த்தை வராது. கட்சி படுதோல்வியில் பாடம் கற்கவில்லை என்றால் எதுவும் செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை