உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வரலாற்றில் அழியாத முத்திரை பதித்தவர் கருணாநிதி: பிரதமர் மோடி

வரலாற்றில் அழியாத முத்திரை பதித்தவர் கருணாநிதி: பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'வரும் 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதை நோக்கி, நாம் நம்பிக்கையுடன் நடைபோடும் இந்த வேளையில், கருணாநிதி போன்ற தலைவர்களின் தொலைநோக்கு பார்வையும், சிந்தனைகளும், நம் தேசத்தின் பயணத்தை தொடர்ந்து வடிவமைக்கும்' என, பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா, நேற்று சென்னையில் நடந்தது. இதையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தி:கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா நடப்பது அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் புகழ்பெற்ற தலைவர்களில் ஒருவரான கருணாநிதிக்காக நடக்கும் முக்கியமான விழா.அவர் இந்திய அரசியல், இலக்கியம், சமூக பணிகள் ஆகியவற்றில் உயர்ந்து விளங்கிய தலைவர். தமிழகத்தின் வளர்ச்சியிலும், நாட்டின் முன்னேற்றத்திலும், எப்போதும் அக்கறை கொண்டவராக திகழ்ந்தார். சிறந்த அரசியல் தலைவராக விளங்கிய கருணாநிதி, பலமுறை மக்களால் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அப்பதவியில் இருந்து, சமூக வளர்ச்சி மற்றும் அரசியல் குறித்த, அவரது ஆழமான புரிதலை அடிக்கோடிட்டு காட்டும் வகையில், நம் நாட்டின் வரலாற்றில் அழிக்க முடியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளார்.பன்முகத்திறமை கொண்டவர் அவர், தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை வளர்த்தெடுக்க எடுத்த முயற்சிகள் இன்றும் மக்களால் நினைவு கூரப்படுகின்றன. அவரது இலக்கிய திறமை, அவரது படைப்புகளில் பிரகாசித்ததுடன், அவருக்கு, 'கலைஞர்' என்ற பட்டத்தையும் பெற்று தந்தது.அவரது நுாற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடுவது, அவரது மரபு மற்றும் அவரது பணிகளை என்றென்றும் நினைவூட்டும். இந்த முக்கியமான தருணத்தில், கருணாநிதிக்கு என் இதயப்பூர்வமான அஞ்சலி.2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதை நோக்கி, நாம் நம்பிக்கையுடன் நடைபோடுகிறோம். இந்த வேளையில், கருணாநிதி போன்ற தலைவர்களின் தொலைநோக்கு பார்வையும், சிந்தனைகளும், நம் தேசத்தின் பயணத்தை தொடர்ந்து வடிவமைக்கும். கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா வெற்றி அடைய வாழ்த்துகள்.இவ்வாறு வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.விழாவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Venugopal PV
ஆக 19, 2024 15:10

உலகத்தில் மட்டமான ஈவுஇறக்கமற்ற மக்கள் பண கொள்ளைக்காரன் சண்டாளன் பல துணை கட்டிய காதகன் தமிழகத்தின் தரித்திரம்


Lakshminarasimhan
ஆக 19, 2024 09:41

இவை எல்லாம் கூட்டணிக்கான அச்சாரம்


R S BALA
ஆக 19, 2024 07:33

இது ஒரு சம்பிரதாய கடிதம்தான் என்றாலும் வார்த்தைகள் மிக கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது..அப்படியிருந்தும் இந்த கடிதத்தை ஏற்கவும் ரசிக்கவும் முடியவில்லை.


Dharmavaan
ஆக 19, 2024 07:18

ஒரு ஊழல் திருடனை, கேவலமான பண்புள்ளவனை போற்றுவது ஈனச்செயல்


karunamoorthi Karuna
ஆக 19, 2024 07:06

சர்க்கரையை எறும்பு தின்றது சாக்கு பைகளை கரையான் தின்றது சர்க்காரியா கமிஷன் அறிக்கை


M S RAGHUNATHAN
ஆக 19, 2024 07:05

உண்மை. ஊழலின் ஊற்றுக் கண். Grand father of corruption. இவருக்கு நாணயம் வெளியிடும் போது நிச்சயம் நாதுராம் கோட்சே அவர்களுக்கும் வெளி இடவேண்டும். உண்மையான தேச பக்தன் நாதுராம் கோட்சே. கருணாநிதியோ இந்தியாவின் சுதந்திர திருநாள் துக்க தினம் என்று சொன்ன கட்சியில் இருந்தவர். அன்று துக்கம் அனுஷ்டித்தவர். உண்மையான தேச பக்தர்கள் தலை குனியும் நாள் இந்த நாணயம் வெளி இடும் நாள்.


ராமகிருஷ்ணன்
ஆக 19, 2024 06:39

திமுகவை பற்றி மோடிஜீ செய்துள்ளது வஞ்சி புகழ்ச்சியாக, நக்கலா இதை பார்க்கிறேன். நன்கு கவனிப்பவர்களுக்கு புரியும். அவரின் பதவிக்காக சொல்லியுள்ளார். பி ஜே பி யின் கருத்து அல்ல.


Palanisamy Sekar
ஆக 19, 2024 06:34

எனது 20 வருட கருணாநிதி ஊழல் எதிர்ப்பினை ஒரே ஒரு நொடியில் ஊழலுக்கு எதிரான பிரதமரின் இந்த அறிக்கை தூள் தூளாக்கிவிட்டது. ஏற்கனவே நாணயத்தில் உருவம் பொறித்த கொடுமையை தாங்க முடியாத நேரத்தில் இப்படி ஒரு அறிக்கையா? ஊழ்வாதிகளுக்கு இந்த மரியாதை கொடுப்பது என்பது செந்தி்ல பாலாஜி போன்றோருக்கு சமிக்ஞையா. . லாலு ஊழல்வாதி என்றால் அவரை விட பன்மடங்கு ஊழல் வாதியை ஆதரிப்பது மனம் கனக்கின்றது


Jysenn
ஆக 19, 2024 06:19

போங்க நீங்களும் உங்க அரசியலும் .நாங்க அடி முட்டாள்கள் தான்.


மோகனசுந்தரம்
ஆக 19, 2024 06:03

திருட்டு அயோக்கியத்தனம் செய்வதில் முத்திரை பதித்தவர். வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை