| ADDED : ஜூன் 30, 2024 12:58 AM
சென்னை:சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:தி.மு.க., - அண்ணாதுரை: பட்டுக்கோட்டை தொகுதி, ஆலத்துார் முசிறி கைலாசநாதர் கோவிலுக்கு திருப்பணி செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா?அமைச்சர் சேகர்பாபு: இக்கோவிலில் ஏற்கனவே ஐந்து பணிகள் எடுக்கப்பட்டு, திருப்பணி நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள், 2,000 கோவில்களுக்கு கும்பாபிேஷகம் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதில், இந்த கோவிலும் உள்ளது. ஆண்டு இறுதிக்குள் இக்கோவிலுக்கு கும்பாபிேஷகம் நடத்தப்படும்.அண்ணாதுரை: பட்டுக்கோட்டை தொகுதி, விக்கிரமம் ஊராட்சிக்கு உட்பட்ட தியாகராஜ சுவாமி கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும்.அமைச்சர் சேகர்பாபு: உறுப்பினர் உபயதாரர் நிதியின் வாயிலாக ஏற்பாடு செய்து தந்தால், சாத்தியக்கூறுகள் இருந்தால் ராஜகோபுரம் கட்டப்படும். தி.மு.க., ஆட்சி ஏற்பட்ட பின், 109 கோடி ரூபாயில், 54 ராஜகோபுரங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பா.ஜ., - வானதி சீனிவாசன்: கோவை தெற்கு தொகுதியில் உள்ள புளியகுளம் விநாயகர் கோவிலுக்கு, ராஜகோபுரம் அமைத்து தர வேண்டும்.அமைச்சர் சேகர்பாபு: இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றப்படும்.தி.மு.க., - கணபதி: மதுரவாயல் மார்க்கசகாய ஈஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், விளையாட்டுத்திடல் அமைக்க வேண்டும்.அமைச்சர் சேகர்பாபு: சம்பந்தப்பட்ட துறை சார்பில் கருத்துரு அனுப்பினால் பரிசீலிக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.