உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதி பெயரை தவறாக பயன்படுத்த தடை கோரி வழக்கு

ஜாதி பெயரை தவறாக பயன்படுத்த தடை கோரி வழக்கு

மதுரை : புதுக்கோட்டை மாவட்டம் ராங்கியம் கலாதேவி. இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: 'ஆண்டி பண்டாரம்' சமூகம் மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. கோயில்களில் பூஜை செய்யும் பூஜாரிகளாக உள்ளனர். இச்சமூகத்தின் பெயரை சில சினிமா, 'டிவி' தொடர்கள், நிகழ்ச்சிகளில் தவறாக பயன்படுத்துகின்றனர். அவதுாறாக கேலி பேசி பாகுபடுத்தும் வகையில் உள்ளது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் அரசாணை பிறப்பிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு மத்திய பிற்பட்டோர் நலத்துறை இணைச் செயலர், திரைப்பட தணிக்கை வாரியம், தமிழக பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் நலத்துறை செயலர், தகவல் தொழில்நுட்பத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை