உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சி.பி.ஐ., விசாரணை கேட்கும் மாயாவதி: உ.பி.,யில் எப்படி ஆட்சி நடத்தினார்?

சி.பி.ஐ., விசாரணை கேட்கும் மாயாவதி: உ.பி.,யில் எப்படி ஆட்சி நடத்தினார்?

புதுக்கோட்டை : ''உ.பி.,யில் ஒதுக்கப்பட்டுள்ள நிலைக்கு தள்ளப்பட்டவர் மாயாவதி. அவர், அங்கே எப்படி ஆட்சி நடத்தினார் என்பது எல்லோருக்கும் தெரியும்,'' என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.புதுக்கோட்டையில் அவர் அளித்த பேட்டி: தமிழக காவல் துறை நியாயமான விசாரணை மேற்கொள்ளும் என, சமீபத்தில் கொலையான பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினர் நம்புகின்றனர். விசாரணை நியாயமாக நடக்கும். கொலைக்கு பொறுப்பானவர்களுக்கு கட்டாயம் தண்டனை வாங்கிக் கொடுப்போம். சமூக நீதியை பாதுகாப்பதில் தி.மு.க.,வைக் கடந்து வேறு யாரும் இல்லை. ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் நலனுக்காக பாடுபடும் இயக்கம் தி.மு.க., சமூகத்தில் எந்த அந்தஸ்தில் இருந்தாலும், தவறு என்றால் அவர்களை தண்டிக்க அஞ்சாத அரசு தி.மு.க.,வும் தமிழக காவல்துறையும் தான்.ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தால், தி.மு.க.,வுக்கு இடைத்தேர்தலில் எந்த பின்னடைவும் ஏற்படாது. அடுத்தடுத்து வரும் தேர்தல்களிலும் சிக்கல் இருக்காது. தமிழகத்தில் மீண்டும் மீண்டும் தி.மு.க., தான் ஆட்சிக்கு வரும். மாயாவதி, தமிழகத்துக்கு வந்து சட்டம் - ஒழுங்கு சரியில்லை என சொல்லிச் சென்று இருக்கிறார். அவர் உ.பி.,யில் ஆட்சி நடத்திய காலத்தை மறந்து விட்டார். எப்படி ஆட்சி நடத்தினார் என்பது உலகத்துக்கே தெரியும். அதனால் தான் இன்று, உ.பி.,யில் ஒதுக்கப்பட்ட நிலையில் உள்ளார். இருந்தும் அவரை நாங்கள் வெறுக்கவில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என மாயாவதி சொல்லியிருக்கிறார்; ஆனால், மற்றவர்கள் யாரும் அதை ஏற்கவில்லை. தமிழக காவல் துறை மீது நம்பிக்கை இருப்பதாக எல்லோரும் சொல்லி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

M S RAGHUNATHAN
ஜூலை 10, 2024 17:09

மாயாவதி அவர்களை அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம் சிங் யாதவ் கிட்டத்தட்ட வீட்டு சிறையில் வைத்தார்.பிஜேபி தான் அப்போது அவரை மீட்டது. இது வரலாறு. திமுக வினர்க்கு இதெல்லாம் தெரியாது.


Velan
ஜூலை 10, 2024 10:08

இங்க ரொம்ப யோக்கியமா நடக்குதுனு நெனைப்பா?


VENKATASUBRAMANIAN
ஜூலை 10, 2024 08:37

இவர் அமைச்சர்தானா. உன் ஆட்சியில் நடப்பதை சொன்னால் திரும்ப நீ என்ன செய்தாய் என்று கூறுவதுதான் திராவிட மாடல் போலும்.


Duruvesan
ஜூலை 10, 2024 08:21

பாஸ் 2026 ல அவங்க பிஜேபி கூட்டணி, சேகர் பாபு ... போனும். அது தான் இதுன்னு சொல்றாங்க. நம்ம ஆளுங்க வேங்கை வயல் கேஸ்? அதான் அந்தம்மா சிபிஐ வர சொல்லி கேட்குது. சிபிஐ வந்தா நம்ம கட்சி ஆளுங்க உள்ள போவது ???


R.RAMACHANDRAN
ஜூலை 10, 2024 07:12

கொலை செய்துவிட்ட பிறகு குற்றவாளிகளுக்கு தண்டனை அளிப்பதால் கொலையுண்டவர்களுக்கும் அவரகளது குடும்பத்தினர்களுக்கும் ஒரு பயனும் இல்லை.காவல் துறை அப்பாவிகள் மீது வழக்கு தொடர்ந்து அவரக்ளுக்கு தண்டனை வாங்கி தருவதில் காட்டும் சிரத்தையை குற்றவாளிகளுக்கு எதிராக காட்டுவதில்லை.காரணம் அவர்களால் பயனடைவதால்.மத்திய புலனாய்வுத் துறை மற்றும் மத்திய அரசின் இதர துறையில் உள்ளவர்களும் நேர்மையானவர்களாக இல்லாமல் லஞ்ச ஊழலில் ஈடுபட்டு குற்றவாளிகளை பாத்து காப்பதில் குறியாக உள்ளனர்.


Sudarsan Ragavendran
ஜூலை 10, 2024 06:38

காலம் காலமாக எந்த காரணமும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவாக பேசுவது, ஏளனமாக பேசுவது, வேலைவாய்ப்புகள் இல்லாமல் சட்டரீதியாக செய்தது எந்தவித சமூக நீதி சட்ட அமைச்சர் அவர்களே..


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை