உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ம.தி.மு.க., - எம்.பி., கணேசமூர்த்தி மரணம்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ம.தி.மு.க., - எம்.பி., கணேசமூர்த்தி மரணம்

கோவை:கோவையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி உயிரிழந்தார்.ஈரோடு எம்.பி.,யாக இருந்தவர் கணேசமூர்த்தி, 76. ம.தி.மு.க.,வின் மூத்த தலைவரான இவர், 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில், தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்த அவர், கடந்த 24ம் தேதி விஷத்தன்மை கொண்ட மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று காலை 5:05 மணிக்கு உயிரிழந்தார். சிகிச்சையின் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக, மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.இவரது உயிரிழப்பு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து, போலீசார் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.அவருக்கு அஞ்சலி செலுத்த ஈரோடு செல்ல, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, கோவை விமான நிலையம் வந்தார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது:கணேசமூர்த்தி 50 ஆண்டு கால நண்பர்; கொள்கையும், லட்சியமும் பெரிது என்று வாழ்ந்தார். சமீப காலமாக அவர் ஒருவித மன அழுத்தத்தில் இருப்பதாக, மாவட்ட செயலர் முருகன், அவரது மகன் கபிலன் தெரிவித்தனர்.தொகுதி ஒதுக்கீடு பிரச்னையில் இடம் கிடைக்காவிட்டாலும், மகிழ்ச்சியாகத் தான் இருந்தார்; அவரிடம் பேசிக் கொண்டு தான் இருந்தேன்.இப்படி ஒரு முடிவெடுப்பார் என்று நான் நினைக்கவே இல்லை. அவர் மருந்து குடித்து விட்டார் என்ற செய்தி கேட்ட உடனே, எனக்கு உயிரே போய்விட்டது.எம்.பி., சீட் கிடைக்காததால் தான், இந்த முடிவுக்கு வந்தார் என்பதில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை.மன உறுதி வாய்ந்த அவர் மறைந்தார் என்ற செய்தியை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர் எந்த பதவியும் இல்லை என்று கவலைப்பட்டதும் கிடையாது.இவ்வாறு வைகோ கூறினார்.பின், அவரது உடல் சொந்த ஊரான குமாரவலசுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்குள்ள அவரது தோட்டத்திலேயே உடல் எரியூட்டப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை