உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மூன்று நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு: வாரியம் உத்தரவு

மூன்று நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு: வாரியம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: புதிய இணைப்பு உள்ளிட்ட மின்சார சேவைகளை விரைந்து வழங்கும் வகையில், புதிய மின் வினியோக விதிகளை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம், பிப்ரவரியில் வெளியிட்டது. அதை அமல்படுத்தி மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வீடு, கடைகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில், புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது, அந்த இடத்தில் இணைப்பு வழங்க, கூடுதல் மின் சாதனங்கள் நிறுவ அவசியமில்லாத பட்சத்தில், மூன்று நாட்களுக்குள் இணைப்பு வழங்கப்பட வேண்டும். அதிகபட்சம், ஏழு நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும்.மின் இணைப்பு வழங்க, கம்பம் நிறுவ வேண்டும் எனில், 60 நாட்கள்; டிரான்ஸ்பார்மர் நிறுவ வேண்டும் எனில், 90 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும்.இதேபோல, மின் கட்டண விகிதம் மாற்றம், குறைபாடு உடைய மீட்டர்களை மாற்றி தரும் சேவைகளுக்கான கால அவகாசங்களும் குறைக்கப்பட்டு உள்ளன. புதிய விதிகள் குறித்து பிரிவு அலுவலகங்களுக்கு தெரிவித்து, தவறாமல் பின்பற்ற அறிவுறுத்துமாறு, மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு, வாரியம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

enkeyem
மே 16, 2024 10:13

இந்த விதிகள் எல்லாம் எங்கெனவே அமுலில் உள்ளவைகள் தான் என்னவோ புதிதாக விதிகள் ஏற்படுத்தியள்ளது போல் விளம்பரம் மட்டுமே ஏற்கெனவே உள்ள விதிமுறைகள் எல்லாமின்வாரிய அலுவலகங்களிலும் காற்றில் பறக்க விடப்படுகின்றன


sethu
மே 16, 2024 09:52

புதிய இணைப்பு கொடுத்துவிட்டு பணம் பண்ணலாம் ஆனால் மின்சாரம் வராது இன்னும் வருஷத்தில் இந்த உலகமே அழிந்துவிடும் என நினைத்து திமுக அரசு பயங்கர அவசர கொள்ளையை நிகழ்த்துகிறது


Kasimani Baskaran
மே 16, 2024 05:16

தாழ்வழுத்ததில் குறைந்த அழுத்தத்தில் மின்சாரம் கொடுத்து உயிரை வாங்குவார்கள் அப்ப என்ன செய்வீங்க?


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை