மேலும் செய்திகள்
உரிமைத் தொகை எனும் உருட்டு இனி எடுபடாது; நயினார் நாகேந்திரன்
3 hour(s) ago | 1
மகளிர் உரிமைத்தொகை உயரும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
3 hour(s) ago | 3
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலின் போது, தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் இறந்தால், 5 லட்சம்; பணியின் போது வன்முறை கும்பல் தாக்குதல், சமூக விரோதிகள், பயங்கரவாதிகள் தாக்குதலில் இறந்தால், 10 லட்சம்; நிரந்தர ஊனம் ஏற்பட்டால் 2.50 லட்சம்; பயங்கரவாதிகள் தாக்குதலில் ஊனம் ஏற்பட்டால் 5 லட்சம்; சிறு காயமாக இருந்தால் 10,000 ரூபாய் வழங்கப்படுகிறது.இத்தொகையை தேர்தல் கமிஷன், 2019 மார்ச் 10 முதல் உயர்த்தி அறிவித்துள்ளது. தேர்தல் கமிஷன் உத்தரவை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலின் போது, எதிர்பாராத விதமாக தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் இறந்தால், 15 லட்சம்; பயங்கரவாதிகள் அல்லது சமூக விரோதிகள் தாக்குதலில் இறந்தால், 30 லட்சம்; நிரந்தர ஊனம் ஏற்பட்டால் 7.50 லட்சம் ரூபாய்; சிறு காயமாக இருந்தால், 40,000 ரூபாய் என, உயர்த்தி வழங்க அனுமதி அளித்துள்ளது.
3 hour(s) ago | 1
3 hour(s) ago | 3