உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொழில் வளர்ந்தால் தான், மாநிலம் வளரும்; மக்கள் வாழ்க்கையும் உயரும்!

தொழில் வளர்ந்தால் தான், மாநிலம் வளரும்; மக்கள் வாழ்க்கையும் உயரும்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தொழில் வளர்ந்தால்தான் மாநிலமும் வளரும். மக்களின் வாழ்க்கையும் உயரும்' என தமிழக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஸ்டாலின் பேசினார்.சென்னையில் ரூ.17,616 கோடி முதலீட்டில் 19 முடிவுற்ற திட்டங்களை ஸ்டாலின் துவக்கி வைத்தார். அவர், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட ரூ.51 ஆயிரம் கோடி மதிப்பிலான 28 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். புதிய தொழில் திட்டங்கள் மூலம் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தமிழக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: 3 ஆண்டுகளில் ரூ.9.74 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. அனைத்து துறை வளர்ச்சி என்பது அனைத்து சமூக வளர்ச்சி ஆகும். 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் நாம் ஈர்த்த முதலீடுகள் தான் நமது வெற்றிக்கு காரணம்.

முதலீட்டாளர்கள் நிம்மதி

2030ம் ஆண்டில் ஒரு ட்ரில்லியன் அமெரிக்கா டாலர் என்ற இலக்குடன் தமிழக அரசு செயல் படுகிறது பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் என்பது உலகிற்கு தெரியும். பெண்கள் அதிகம் பணிபுரியும் மாநிலத்தில் பெண்களுக்காகவே பல்வேறு திட்டங்கள் உள்ளன. தமிழகம் அமைதியான மாநிலம் என்பதால் நிம்மதியாக தொழில் நடத்தலாம் என்ற மனநிலை முதலீட்டாளர்களுக்கு வந்துள்ளது. தொழிலதிபர்கள் தமிழகத்தின் தூதுவராக மாறி மற்றவர்களை முதலீடு செய்ய அழைத்து வர வேண்டும்.

முதலீட்டாளர்கள்

தொழில் வளர்ந்தால் தான் மாநிலமும் வளரும். மக்களின் வாழ்க்கையும் உயரும். புரிந்துணர்வு போடப்பட்டதும் நமது கடமை முடிந்ததாக கருதவில்லை. ஒப்பந்தத்துடன் முடித்துக் கொள்ளாமல், தொழில் துவங்க அனைத்து உதவிகளும் முதலீட்டாளர்களுக்கு செய்யப்படுகிறது. தமிழகத்தின் பொருளாதாரத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் நாள் இன்று. தமிழக இளைஞர்களின் திறமையை தொழில்துறையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் தொழில் துவங்குவதன் மூலம் அதனை சுற்றியுள்ள பகுதிகள் வளர்ச்சி அடையும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Barakat Ali
ஆக 22, 2024 09:02

trillion என்பதை drillion என்று உச்சரித்த விதம் அருமை .........


God yes Godyes
ஆக 22, 2024 03:01

இதுவரை தமிழகத்தில் யார் யார் எந்தெந்த தொழில்களை எத்தனை விழுக்காடு வளர்த்தனர் கணக்குண்டா. அதில் இப்போதைய நாடு முன்னேற்றம் எவ்வளவு. கற்பனைக்கு அளவே இல்லையா.


God yes Godyes
ஆக 22, 2024 02:50

கேக்க நல்லாகீது.ஆனாக்கா வேலைக்கு ஆகாது ப்பா.


Ramesh Sargam
ஆக 21, 2024 21:11

இவர் எந்த தொழில் வளர்ச்சியை பற்றி சொல்கிறார்.கஞ்சா வளர்ப்பு தொழிலா, சாராயம் காய்ச்சும் தொழிலா இல்லை லேட்டஸ்ட் போதைப்பொருள் கடத்தல் தொழிலா...?


Barakat Ali
ஆக 21, 2024 16:39

தொழில் வளர்ந்தால்தான் மாநிலமும் வளரும். மக்களின் வாழ்க்கையும் உயரும் ...... அடடா ..... எங்கள் துக்ளக்கார் இந்த உண்மையை ஒரு வழியா புரிஞ்சுக்கிட்டாரு ..... இனிமே டெவலப்மென்ட் ... டெவலப்மென்ட் ... டெவலப்மென்ட் ... தமிழ்நாடு வல்லரசுதான் .... அட .. யாரு முகத்துல தண்ணி தெளிச்சு எழுப்பிவிட்டது ????


Dharmavaan
ஆக 21, 2024 14:50

சொல்வது எந்த அளவுக்கு உண்மை என்பதை வல்லுநர்கள் சொல்ல வேண்டும்


venugopal s
ஆக 21, 2024 13:45

பாவம் சங்கிகள், இப்போது எல்லாம் தினந்தோறும் ஜெலூசில் குடிக்க வேண்டியுள்ளது!


Mr Krish Tamilnadu
ஆக 21, 2024 13:37

நல்ல திட்டங்கள், நல்ல வளர்ச்சிகள் அனைத்தும் மக்களாலும் பாராட்டப்படும். அதே சமயம் போதை பொருள், கைக்கூலிகளின் ப்ளான் செய்து துணிச்சலாக செய்யப்படும் நடவடிக்கைகள், கள்ளச்சாராயம் அந்த தொழில்களும் வளர்வது சற்று நெருடலாக உள்ளது. காவல்துறையின் கைகளும், கண்களும் செயல்பட அனுமதிப்பது நல்லது.


ஆரூர் ரங்
ஆக 21, 2024 12:36

டாஸ்மாக் ஜாஃபர் தொழில் வளர்ச்சி சிறந்த உதாரணம்.


krishna
ஆக 21, 2024 13:44

SUPER CORRECT ANDHA 2 MATTUMDHAN DRAVIDA MODEL AATCHI SAADHANAI. IDHIL MANAL KANIMA VALA KOLLAI SERTHU KOLLALAAM.


பாமரன்
ஆக 21, 2024 14:59

பக பக. பக பக..அய்யோ அய்யோ...எரியுதே எரியுதே...


மேலும் செய்திகள்





புதிய வீடியோ