மேலும் செய்திகள்
எய்ட்ஸ் சங்க ஊழியர்கள் ஜன.4ல் உண்ணாவிரதம்
4 hour(s) ago
சென்னை : அரசு பள்ளிகளில் புதிதாக தேர்வு செய்யப்படும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் விபரங்களை, எமிஸ் தளத்தில் பதிவு செய்யும்படி, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், பள்ளி மேலாண்மை குழுக்கள் செயல்படுகின்றன. இதற்காக, 2022ல் தேர்வானோரின் பதவிக்காலம் கடந்த மாதத்துடன் முடிந்ததால், 2024 -- 2026ம் கல்வியாண்டுக்கான புதிய தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.தமிழகம் முழுதும் உள்ள 37,061 அரசு பள்ளிகளுக்கான புதிய உறுப்பினர் தேர்வு, 10, 18ம் தேதிகளில் நடந்தது. இரண்டு கட்டங்களில், 23,848 பள்ளிகளில், மேலாண்மை குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டன. ஒவ்வொரு பள்ளியிலும் தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட 24 பேர் குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் அதிகம் தேர்வாகி உள்ளனர். அடுத்து, 3, 4ம் கட்ட தேர்வுகள், வரும் 24, 31ம் தேதிகளில் நடக்க உள்ளன. இந்நிலையில், பள்ளிக்கல்வி துறை அனுப்பிஉள்ள சுற்றறிக்கையில், 'புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை, எமிஸ் தளத்தில் பதிய வேண்டும்' என, முதன்மை கல்வி அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கூறப்பட்டுள்ளது.
4 hour(s) ago