உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "கல்லால் அடிப்போம் என மக்கள் எச்சரிக்கை - ப.சிதம்பரம் பிரசாரத்தில் பரபரப்பு

"கல்லால் அடிப்போம் என மக்கள் எச்சரிக்கை - ப.சிதம்பரம் பிரசாரத்தில் பரபரப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காரைக்குடி: சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தனது மகன் கார்த்திக்கு ஆதரவு கேட்டு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பிரசாரம் செய்தபோது கிராம மக்கள் பல கேள்விகளை எழுப்பியதால் பதில் சொல்ல முடியாமல் திணறினார். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=s8mfl19c&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மித்ராவயல் என்ற பகுதியில் திறந்தவேனில் சிதம்பரம் பிரசாரம் செய்தார். மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பினர். இவரால் பேச முடியவில்லை. அப்போது சிதம்பரம் மக்களை பார்த்து ' கையெடுத்து கும்பிடுகிறேன், நான் சொல்வதை முதலில் கேளுங்கம்மா, என்று கெஞ்சினார். எனக்கு பேச உரிமை இருக்கு, உங்களுக்கும் உரிமை இருக்கு. நான் பேசி முடிச்சதும் பேசுங்கம்மா என்றார். தொடர்ந்து பெண்கள் கேட்ட ஆவேச கேள்வி வருமாறு:' டாஸ்மாக் கடையை அகற்ற முடியவில்லை, ஒரே வீட்டில குடிச்சு 3 பேர் செத்து போயிட்டாங்க. குடிச்சுப்புட்டு பலர் வேலைக்கே போவதில்லை, எனது மகனுக்கு வேலை கிடைக்கவில்லை. எங்கள் கேள்விக்கு உரிய பதில் சொல்லுங்கள்,இது வரை தொகுதி பக்கமே கார்த்தி வரவில்லை. தொகுதிக்கு என்ன செஞ்சீங்க.? 40 வருடத்திற்கு முன்பு இருந்த ஆஸ்பத்திரி வசதி இப்ப இல்லை. ஒரு ஆஸ்பத்திரி கூட இல்லை. இனிமேல் யாரும் இந்த பக்கம் ஓட்டு கேட்டு வரக்கூடாது. காங்கிரசுக்கும் ஓட்டு போட முடியாது. யாரும் வந்தால் கல்லை கொண்டு அடிப்போம் ' என எச்சரித்தனர். சிதம்பரத்துடன் வந்த நிர்வாகிகள் கிராம மக்களை சமரசம் செய்தனர். இதனையடுத்து பிரசாரத்தை பாதியில் முடித்து விட்டு திரும்பினார் சிதம்பரம்.

மும்முனை போட்டி

சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம், அதிமுக சார்பில் சேவியர்தாஸ், பா.ஜ. கூட்டணி சார்பில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சார்பில் தேவநாதன் யாதவ் போட்டியிடுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

பாரதி
ஏப் 02, 2024 18:39

நமது நாட்டு பணம் அச்சடிக்கும் எந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்றவன்தான்


ராமகிருஷ்ணன்
ஏப் 02, 2024 17:47

மக்களின் மன மாற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது. கல் வீச்சு நடந்தாலும் நல்லதே. திமுகவின் கூட்டணிக்கு தோல்வி நிச்சயம்


Mohan
ஏப் 02, 2024 14:27

கம்பி என்னும் நேரமும் நெருங்கிவிட்டது


Rengaraj
ஏப் 02, 2024 14:03

எவ்வளவு தான் பட்டாலும் மக்கள் திருந்த மாட்டார்கள் இந்த அரசியல் வாதிகள் வோட்டுக்கு பணம் கொடுத்து ஏமாற்றி விடுவார்கள் மக்கள் மனதில் மாற்றம் வரும்வரை சிதம்பரம் , கார்த்தி மாதிரி ஆட்கள் ஜெயித்துக்கொண்டிருப்பார்கள்


Lion Drsekar
ஏப் 02, 2024 13:39

மக்கள் எதிர்ப்பு, மக்கள் ஆவேசம், கட்சிக்குள் பிளவு, முடிவு யார் வரவேண்டாம் என்று மக்கள் நினைக்கிறார்களோ அவர்களே வெற்றிபெற்று மக்களுக்கு நல்லாட்சி கொடுப்பதுதான் வழக்கம், தவறு எங்கு என்று யாராலும் கணிக்க முடியாத அளவுக்கு நூதன முறையில் விஞ்ஞானம் விளையாடுகிறது வந்தே மாதரம்


SIVA
ஏப் 02, 2024 13:36

இந்த முறை மாநில ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பு அலை உள்ளது, ஆர் எஸ் பி மாடல் பத்திரிகைகள் பக்குவமாய் மாநில ஆட்சியை ஆதரிப்பதால் அது இல்லாததது போன்ற மாயை உள்ளது


karuppanna govnder velusamy
ஏப் 02, 2024 13:33

மக்கள் கேட்பது சரிதான் தேர்தலுக்கு மட்டும் வருகிறார்கள் ஊர்ப்பக்கம்


Krishnamurthy Venkatesan
ஏப் 02, 2024 13:01

வோட்டின் டிமாண்ட் அதிகமாக இருப்பதால் அதிக விலையும் கொடுக்க வேண்டி இருக்கும்


Sridhar
ஏப் 02, 2024 12:42

இதே மாதிரியான குமறல்களும் எதிர்ப்புகளும் திருட்டு கும்பல் செல்லுமிடமெல்லாம் மக்களிடமிருந்து எதிரொலிக்கவேண்டும் போதும் இந்த கொள்ளைக்கும்பலின் போலி நாடகங்கள் மக்கள் எல்லாம் சேர்ந்து ஓடஓட விரட்டி அடியுங்கள்


வாய்மையே வெல்லும்
ஏப் 02, 2024 12:36

கற்கள் கையிருப்பு இல்லேன்னா சொல்லுங்க நாங்க இந்திய அஞ்சல் அனுப்பிவைக்கிறோம் காங்கிரஸ் தீயமூர்க்கர்கள் உருப்படாத கட்சி என பாமரனுக்கும் புரிந்துவிட்டது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை