உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பஸ்களை முறையாக பராமரிக்க இபிஎஸ் வலியுறுத்தல்

பஸ்களை முறையாக பராமரிக்க இபிஎஸ் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பஸ்களை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்' என, இபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.அவரது சமூக வலைதள பதிவு:திருச்சி நகர பஸ் சென்று கொண்டிருக்கையில், ஒரு வளைவில் கண்டக்டர் இருக்கையுடன் வெளியே விழுந்த சம்பவம், தமிழக மக்களிடம், குறிப்பாக அரசு பஸ்களில் பயணம் செய்யும் பயணியர் இடையே, மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஏற்கனவே சில மாதங்களுக்கு முன், சென்னை மாநகர பஸ்சில், பயணம் செய்த பெண்பயணி ஒருவர் கீழே விழுந்து, விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே, இனியாவது அரசு பஸ்களை, உரிய முறையில் பராமரிப்பு செய்ய வேண்டும். அரசு பஸ்களில் பயணம் செய்பவர்களுக்கு, பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த வேண்டும் என, தி.மு.க., அரசை வலியுறுத்தி இருந்தேன்.ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள், பொதுமக்களிடம் அரசு பஸ் குறித்த நம்பிக்கையை கேள்விக்குறியாக்கி உள்ளன. எனவே, இனியாவது தி.மு.க., அரசு விழித்துக் கொண்டு, அரசு பஸ்களின் ஆயுட்காலத்தை, முன்பிருந்தது போல குறைத்து, புதிய பஸ்கள் வாங்க வேண்டும். இயங்கிக் கொண்டிருக்கும் பஸ்களை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ்சில் இருக்கையுடன் கண்டக்டர் துாக்கி வீசப்பட்டுள்ளார். பஸ்சின் டயர் தனியாக கழன்று ஓடுவது, மேற்கூரை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்றவை நடந்து கொண்டு தான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசு பஸ்களை தி.மு.க., அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம். மொத்தம் உள்ள 20,926 அரசு பஸ்களில் 1,500 பஸ்கள், 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளை கடந்த பஸ்களை இயக்குவதே சட்ட விரோதம். தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் புதிய பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலைக்கு காரணம். இதற்கு திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Mani . V
ஏப் 27, 2024 06:43

அதுக்குத்தான் முதல்வர் குடும்பத்துடன் மாலத்தீவு போகிறார் - மக்களின் வரிப்பணத்தில்


R Kay
ஏப் 26, 2024 14:25

இரு கழகங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் உங்கள் அமைச்சர் அவை சகாக்களும் கோடீஸ்வரர்கள் ஆனது எப்படி? எல்லோரும் என்ன பரம்பரை பணக்காரர்களா?


பேசும் தமிழன்
ஏப் 26, 2024 09:12

இவர் இத்தனை நாள் எங்கே போய் இருந்தார்.. கோமாவில் இருந்தாரா?? இத்தனை நாட்கள் எதிர்கட்சி வேலையை பிஜெபி கட்சி அண்ணாமலை அவர்கள் தானே செய்தார்... இனியும் அவரே அந்த வேலையை பார்த்துக்கொள்வார்... நீங்கள் எப்போதும் போல அமைதியாக இருங்கள்.. இல்லையென்றால் உங்கள் பங்காளி கட்சி திமுக கோபித்துக்கொள்ள போகிறது!! கொடநாடு கொலை.. கொள்ளை ...வழக்கு விசாரணை ஆரம்பமாகி விட போகிறது.


மோகனசுந்தரம்
ஏப் 26, 2024 07:40

இந்த கூமுட்டை எதுக்கு குறுக்க மறுக்க ஓடிட்டு இருக்கு. தன்னுடைய ஆட்சி காலத்தில் எல்லாம் சூப்பராக செய்தது என்று நினைப்பு. அறிவில்லாத ஆட்சியாளர்கள்.


GMM
ஏப் 26, 2024 07:17

பஸ், பஸ் நிலையம் சரியான பராமரிப்பு இல்லை ஆண்டு பராமரிப்பு, பஸ் தயாரிக்கும் தனியாரிடம் விட வேண்டும் இனி பஸ் வாங்கும்போது, ஆயுள் பராமரிப்பு சேர்த்து ஒப்பந்தம் செய்ய வேண்டும் மூத்தகுடிமக்கள், பெண்கள், நீண்ட தூர பயணிகளுக்கு முன் இருக்கை உணவு விடுதி ஓட்டல் தமிழ்நாடு மற்றும் ஆவின் டீ ஸ்டால் பஸ் நிலையம் பராமரிப்பு தனியாரிடம் பயணிகள் தங்கும், உணவு, ஓய்வு இடம் மட்டும் இருக்க வேண்டும் குளியல் , ரெஸ்ட் ரூம், மருந்து, முதல் உதவி கிளினிக், atm ஆவின், அம்மா உணவு, போன்றவை மட்டும் தனியார் கடைகள் அகற்ற வேண்டும் அருகில் காலி இடம் இருந்தால், இரு சக்கர வாகனம் நிறுத்த வேண்டும் வாகனத்தில் எந்த ஆண்டு வாங்கப்பட்டது, எந்த ஆண்டவரை இயக்க முடியும் என்று எழுத வேண்டும் வாகன விளம்பரம் முற்றிலும் நீக்க வேண்டும்


Duruvesan
ஏப் 26, 2024 07:08

பாஸ் சும்மா எதுக்கு பீலா நம்ம கூட்டணி கட்சி நாம எல்லாம் ஒன்னு தான் போவியா


விஸ்வநாத் கும்பகோணம்
ஏப் 26, 2024 06:43

இந்த செய்தியை அல்லது மென்மையான அறிக்கையை தினமலர் போனால் போகிறது என்று பிரசுரித்தது போல் தெரிகிறது. ஒரு செய்திக்கு வாசகர்கள் கருத்து தெரிவிப்பது போல் உள்ளது, யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல். பாவம் இபிஎஸ்.


VENKATASUBRAMANIAN
ஏப் 26, 2024 06:33

திருட்டு கும்பல் அடிப்பது போல் அடிக்கிறேன் என்பது போல் அறிக்கை விடுகிறார் இதுவே திமுக எதிர்க்கட்சியாக இருந்தால் ஊதி பெரிதாக்கி விடுவார்கள் பயம் பழனிச்சாமியை பேச விடவில்லை


இறைவி
ஏப் 26, 2024 06:01

முன்னாள் முதல்வரே! ரொம்பவும் வலியுறுத்தாதீங்க. கூட்டணி கட்சி இந்நாள் முதல்வருக்கு வலிக்கும். மக்கள் நலம் கருதி அரசு செயல்படணும் என்று மென்மையாக தோழமையுடன் சுட்டுங்கள். எப்படி என்று தெரியாவிட்டால் திருமாவளவனிடமோ அல்லது அழகிரியிடமோ அல்லது செல்வபெருந்தகையிடமோ கேட்டு தெரிந்து கொள்ளவும். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.


Kasimani Baskaran
ஏப் 26, 2024 05:59

பங்காளிகள் போல அனைவரும் அன்பாக கடிந்து கொள்வதைப்பார்த்தால் கண்டக்டர் உயிரைப்பற்றி ஒருவரும் கவலைப்படவில்லை முதலவரை பதவி விலகக்கேட்கவில்லை என்றாலும் போக்குவரத்து மந்திரியையாவது இதற்கு பொறுப்பேற்று பதவி விலகவாவது கேட்டிருக்கலாம் ஊழலில் ஊரிப்போனால் சாராய சாம்ராட்ஜியத்தில் இதுதான் நடக்கும்


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை