உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தல்களில் தொடர் தோல்விக்கு காரணம் அ.தி.மு.க., தொண்டர்களுக்கு தெரியும்; பன்னீர்செல்வம் ஆதங்கம்

தேர்தல்களில் தொடர் தோல்விக்கு காரணம் அ.தி.மு.க., தொண்டர்களுக்கு தெரியும்; பன்னீர்செல்வம் ஆதங்கம்

ராமேஸ்வரம் : - ''அ.தி.மு.க., 10 தேர்தல்களில் தொடர் தோல்வி அடைவதற்கான காரணம் யார் என தொண்டர்களுக்கு தெரியும் ''என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்றுசுவாமி தரிசனம் செய்த பன்னீர்செல்வம் ,பின்னர் அப்பகுதியில் திறந்த ஜீப்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

முன்னதாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி தலைமையில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு பதிவான மொத்த ஓட்டில் 33 சதவீதம் பெற்றுள்ளேன். இதுவே எனக்கு வெற்றி தான். எனக்கு ஓட்டளித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.நவாஸ்கனி எம்.பி., வெற்றியை எதிர்த்து மனு தாக்கல் செய்தது குறித்து நீதிமன்றம் மூலம் அறிவீர்கள். முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அ.தி.மு.க., பிரிந்து கிடப்பதால் தேர்தலில் தொடர்ந்து 10 தோல்விகளை சந்தித்து உள்ளோம்.இதற்கு காரணம் யார் என மக்களுக்கும், தொண்டர்களுக்கும் தெரியும். தோல்வி குறித்து ஆராய வேண்டும் என பழனிசாமியிடம் நான் பலமுறை வலியுறுத்தியும் கண்டு கொள்ளவில்லை. சிதைந்து கிடக்கும் அ.தி.மு.க., இணைய வேண்டும் என நாங்கள் வலியுறுத்துவது போல் சசிகலாவும் வலியுறுத்தி தொண்டர்களை சந்திக்க சுற்றுப்பயணம் செய்கிறார்.காவிரி பிரச்னைக்கு முன்னாள் முதல்வர் ஜெ., சட்டப்பூர்வமாக தீர்வு கண்டார். 'இண்டியா' கூட்டணியில் உள்ள முதல்வர் ஸ்டாலின் கர்நாடக முதல்வருடன் பேசி நமக்கு உரிய தண்ணீரை பெற முனைப்பு காட்ட வேண்டும். மீண்டும் நீதிமன்றம் சென்றால் இழுத்தடிப்பு தான் நடக்கும்.தமிழகத்தில் பள்ளி, கல்லுாரி அருகில் போதைப் பொருள் விற்பனை உள்ளது. இதனால் இளைய சமுதாயம் போதைக்கு அடிமையாகி உள்ளனர். அரசியல் படுகொலை, ரவுடியிசத்தால் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்து விட்டது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை