உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தானாகவே வருமான வரி பிடித்தம் செய்யும் நடைமுறையை கைவிட வேண்டும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல் 

தானாகவே வருமான வரி பிடித்தம் செய்யும் நடைமுறையை கைவிட வேண்டும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல் 

விருதுநகர்:ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்.,ல் தானாகவே வருமான வரி பிடித்தம் செய்யும் நடைமுறையை கைவிட வேண்டும், என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வலியுறுத்தி உள்ளார்.அவர் கூறியதாவது: தமிழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தற்போது ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மை மென்பொருள் அதாவது ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., மூலம் அவர்களது சம்பளம் வழங்கும் அலுவலர்களால் ஊதிய பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்டு வங்கி கணக்கில் நேரடியாக மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.2023-24ம் நிதியாண்டு வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மாதந்தோறும் பெறும் ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை வருமான வரியாக மாத ஊதியத்திலேயே ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., வழியாகவே பிடித்தம் செய்யப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் வருமான வரி கணக்கிடும் போது துல்லியமாக வருமானத்தை கணக்கிட்டு அதற்குரிய வருமான வரியையும் கணக்கிட்டு ஏற்கனவே மாதந்தோறும் ஊதியத்தில் வருமான வரியாக செலுத்திய தொகை போக மீதி செலுத்த வேண்டிய தொகையை பிப்ரவரி ஊதியத்தில் பிடித்தம் செய்து வந்தனர்.இந்த நடைமுறையில் எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை. மிகச்சரியாக தங்கள் வருமான வரியை செலுத்தி வந்தனர்.ஆனால் இந்த நிதியாண்டின் 2024-25 ஏப்ரல் மாதம் முதல் தானியங்கி நடைமுறையில் ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்.,ல் பிடித்தம் செய்யப்படுகிறது.செலுத்த வேண்டிய வருமான வரியை ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் வருமான வரியை கணக்கிட்டு, அத்தொகையை 11 ஆல் வகுத்து ஊதியத்தில் ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., மூலம் தானாகவே பிடித்தம் செய்யும் நடைமுறையை தமிழக அரசின் நிதித்துறை நடைமுறைப்படுத்தி உள்ளது. இந்த நடைமுறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள், தவறான வருமான வரி கணக்கீடுகளால் தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., மென்பொருள் மாதந்தோறும் தங்கள் ஊதியத்தில் இருந்து வருமான வரியை மிகச்சரியாக ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் செலுத்தி வந்த நிலையில் அதில் எவ்வித பிரச்னையும் ஏற்படாத சூழலில் அது தொடர்வது தான் சரியாக இருக்கும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை பாதிக்க கூடிய குழப்பமான தானாகவே பிடித்தம் செய்யும் புதிய நடைமுறையை கைவிட வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Muthuraman
ஏப் 27, 2024 17:42

நான் நிறைய தொடக்க பள்ளி மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிக்கு tds return file செய்து வருகிறேன் எந்த ஆசிரியரும் மாதம் தோறும் கட்டுவது கிடையாது இந்த சாப்ட்வேர் வந்தது நல்லது


spr
ஏப் 27, 2024 17:37

தானாகவே பிடித்தம் செய்யும் புதிய நடைமுறையை கைவிட வேண்டும் என்பதுதான் கோரிக்கை மென்பொருள் செயலியில் பிரச்சினை இணையதள இணைப்பு நம்பத்தத்தக்க வகையில் இல்லையென்பது சரி செய்யப்பட வேண்டும் அரசு பணிகளில் கணிணி மயமாக்கல் என்பதில் தர்க்க ரீதியாக மென்பொருள் உருவாக்க சிறப்பான நிறுவனம் தேர்வு செய்யப்பட வேண்டும்


Raman Mani
ஏப் 27, 2024 17:00

வரி பிடிக்கவில்லையெனில் பண தரவுகள் வரி அலுவல கத்துக்கு அனுப்ப்படுவதில்லை நிறைய பேர்வழிகளின் மொத்த வருமானம் வரிவிதிப்புக்கு உள்ளாகும் வரிபிடித்தம் செய்யாவிட்டாலும் தரவுகள் அனைத்தும் அனபப் பட்டால் நிறையப் பேர்களின் கதை கந்தலாகும்


Raman Mani
ஏப் 27, 2024 16:47

வரிபிடித்தம் செய்யவில்லையென்றால் கொடுகப்படும் பணத் தரவுகள் வரிஅலுவலகத்துக்கு அனுபப் படுவதில்லை நிறையப் பேர்வழிகளின் மொத்தவருமானம் வரிவிதிப்பிலிருந்து சாமர்த்தியமாக வரிகட்டாமல் ஏமாற்றுகின்றனர் சரி வரிபிடித்தம் செய்யவிட்டாலும் முழுத் தகவல்களும் ஏற்றம் செய்யப்பட்டால் நிறையப்பேரின் வண்டவாளம் தண்டவாளம் ஏறும்தண்டவாளம்


ponssasi
ஏப் 27, 2024 10:41

வருமான வரி சட்டத்தில் பிரதி மாதம் பிடிக்கப்பட்டதொகை அடுத்தமாதம் ஏழாம் தேதிக்குள் அரசுக்கு செலுத்தவேண்டும் இதுதான் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கவும், இதர நடைமுறை செலவுகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது நீங்கள் வேண்டுமானால் ஆண்டுக்கு ஒருமுறை ஊதியம் கொடுங்கள் போதும் என அரசிடம் கேட்டுப்பாருங்களேன்


Shekar
ஏப் 27, 2024 10:13

இதில் என்ன தவறு, அதிகம் பிடிக்கப்பட்டிருந்தால் வருடாந்திர Return file பண்ணிய பிறகு சில நாட்களில் refund உங்கள் கணக்கிற்கு தானாக வந்துவிடுமே


chennai sivakumar
ஏப் 27, 2024 08:39

ஆண்டு வருமானத்தை கணக்கில் எடுத்து அதற்கு உரிய வரியை மாதா மாதம் சம்பளத்தில் பிடிக்கும் முறை தனியார் நிறுவனங்களில் பல்லாண்டுகளாக உள்ள ஒன்று அதில் தவறு ஒன்றும் இல்லை மற்றும் வருமான வரி சட்டத்தில் உள்ளது இதற்கு குய்யோ முறையோ என்று அலருவது எதற்கு?


S.Murugesan
ஏப் 27, 2024 06:55

குறிப்பிட்ட வருமானத்திற்கு மேல் வருபவர்களுக்கு மாத சம்பளம் பெறுபவர்கள் சம்பலத்திலேயே குறிப்பிட்ட சதவிகிதம் வரியாகப் பிடித்துக் கொள்ள சட்டம் கொண்டு வரலாம் அவர்கள் வருமானவரி தாக்கல் செய்யவும் தேவையில்லை


raman
ஏப் 27, 2024 06:42

புதிய முறைதான் வேண்டாம் என்கிறார்களே தவிர, வருமான வரி பிடித்தம் வேண்டாம் என்று சொல்லவில்லை முன்பு இருந்ததுபோல் வரி பிடித்தம் செய்ய சொல்கிறார்கள் தலைப்பு தவறு


மேலும் செய்திகள்







புதிய வீடியோ