தேர்தல் அன்று மழை
சென்னை:தமிழகம், புதுச்சேரியில், 40 லோக்சபா தொகுதிகளுக்கு, நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. இன்றும், தேர்தல் நடக்கும் நாளையும், கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலையுடன் வெயில் கொளுத்தும்; மற்ற மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, கரூர் பரமத்தியில் 42 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. இது, பாரன்ஹீட்டில் 108 டிகிரியாகும்.சென்னை மீனம்பாக்கம், தஞ்சாவூர், திருப்பத்துார், தொண்டி 38; மதுரை, கோவை, திருத்தணி 39; தர்மபுரி, சேலம், நாமக்கல், வேலுார் 40; திருச்சி, ஈரோடு 41 டிகிரி செல்ஷியஸ் என, மாநில அளவில் 14 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டையொட்டி வெப்பம் பதிவானது.