உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டார் 3.0 சாப்ட்வேர் தயாரிக்கிறது பதிவுத்துறை

ஸ்டார் 3.0 சாப்ட்வேர் தயாரிக்கிறது பதிவுத்துறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சொத்து விற்பனை பத்திரங்கள் பதிவு நடவடிக்கைகளை, 'ஆன்லைன்' முறைக்கு மாற்றுவதற்காக, 'ஸ்டார் 2.0' என்ற சாப்ட்வேர், 2018ல் பயன்பாட்டுக்கு வந்தது. நடைமுறை ரீதியாக இதில் பல்வேறு மாற்றங்கள் தேவைப்படுகின்றன. இதை கருத்தில் வைத்து, 'ஸ்டார் 3.0' என்ற புதிய சாப்ட்வேர் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இது குறித்து, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பதிவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2023 - 24 நிதி ஆண்டில் அறிவிக்கப்பட்டபடி, ஸ்டார் 3.0 சாப்ட்வேர் தயாரிக்க, 323.45 கோடி ரூபாய் நிதியை பயன்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சாப்ட்வேர் தயாரிப்பதற்கான ஒப்பந்ததாரரை தேர்ந்தெடுப்பதற்கான, 'டெண்டர்' கோரும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்