உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரவுடி வெட்டி கொலை

ரவுடி வெட்டி கொலை

சென்னை: சென்னை, வில்லிவாக்கம், ராஜா தெருவைச் சேர்ந்த சரத்குமார், 30, என்ற ரவுடி, நேற்று மதியம் 1:00 மணியளவில், செங்குன்றம் - வில்லிவாக்கம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை, இருசக்கர வாகனங்களில் பின் தொடர்ந்து வந்த ஏழு பேர் உடைய கும்பல் வழிமறித்தது. அதிர்ச்சி அடைந்த சரத்குமார், அவர்களிடம் இருந்து தப்பிக்க, ஓட்டம் பிடித்தார். விரட்டிச் சென்ற எதிர் கோஷ்டி ரவுடி கும்பல், சரத்குமாரை சுற்றி வளைத்து, பட்டாக்கத்தியால் வெட்டிக் கொலை செய்தனர். இதனால், முன்விரோதத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சரத்குமார் உடலை மீட்டு, ராஜமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி