உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆவணம் காட்டியும் ரூ.50,000 பறிமுதல்: கோவையில் பறக்கும் படை அட்டூழியம்

ஆவணம் காட்டியும் ரூ.50,000 பறிமுதல்: கோவையில் பறக்கும் படை அட்டூழியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவை, எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி, கருணாநிதி நகரை சேர்ந்த சூர்ய பிரியா, நேற்று காலை, 11:00 மணிக்கு, காரில், நவ இந்தியாவில் உள்ள தன் அலுவலகத்திற்கு சென்றார்.சிங்காநல்லுார், இந்திரா கார்டன் பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, தன் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க, 50,000 ரூபாயை கொண்டு செல்வதாக தெரிவித்தார். அதற்கான, வங்கி விபரங்களை மொபைல் போனில் காட்டியுள்ளார்.அப்போது, பணத்தை எண்ணிக் காட்டுவது போல் வீடியோ எடுத்திருக்கின்றனர். பின், '20 ரூபாய் இருந்தால் கொடுங்கள்' என, தேர்தல் பிரிவினர் கேட்டிருக்கின்றனர். தன் மொபைல் போன் கவரில் இருந்த, 10 ரூபாயை சூர்ய பிரியா கொடுத்ததும், 50,010 ரூபாய் இருந்தது போல் கணக்கு காட்டி, பணத்தை பறிமுதல் செய்தனர்.அந்த பெண்ணை, போலீஸ் பாதுகாப்புடன் தெற்கு தாலுகா அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு விசாரித்த போது, 50,010 ரூபாய் இருந்ததாக, தேர்தல் பறக்கும் படையினர் தெரிவித்துள்ளனர்.அதை மறுத்த சூர்ய பிரியா, 'வீடியோ எடுத்ததை மீண்டும் பாருங்கள்' என்று வாக்குவாதம் செய்ததால், அதிகாரிகள் கோபமடைந்து, பின், எழுதி வாங்கிக் கொண்டு, பணத்தை திருப்பிக் கொடுத்தனர்.இச்சம்பவத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சூர்ய பிரியா, கலெக்டருக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் புகார் அனுப்பி உள்ளார்.சூர்ய பிரியா கூறுகையில், ''ஆவணங்கள் காட்டிய பிறகும், பணத்தை தேர்தல் பிரிவினர் பறிமுதல் செய்கின்றனர். படிப்பறிவுள்ள எங்களை பாடாய்படுத்தி விட்டனர். படிப்பறிவு இல்லாதவர்கள், பணம் எடுத்துச் செல்லும் போது, இவர்களிடம் சிக்கி, எவ்வளவு கஷ்டப்படுவர் என நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

NATARAJAN R
ஏப் 07, 2024 14:56

இவர்களது வீரம் எல்லாம் அப்பாவி பொதுமக்களிடம் தான் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், காரில் குடும்பத்தோடு செல்பவர்கள் இவரிடம் கண்டிப்பாக பணம் இருக்காது என்பது பறக்கும் படைக்கும் நன்றாக தெரியும் ஆனால் இவர்களை பரிசோதனை செய்தால்தான், அந்த நேரத்தில் பணத்தை வாக்காளர்களுக்கு விநியோகிக்க எடுத்து செல்பவர்கள், அச்சமின்றி தைரியமாக எடுத்து செல்லலாம் இவர்களுக்கு உண்மையிலேயே ஜனநாயகத்தின் மீது அக்கறை இருந்தால், இவர்கள் ஆளும் கட்சி நடத்தும் கூட்டங்களில் சென்று, அடையாளம் தெரியாமல் நின்று கவனித்தால், அந்த கூட்டத்திற்கு வருகின்ற ஒவ்வொரு நபருக்கும், குறிப்பாக பெண்களுக்கு, தலா ரூபாய் 200 அல்லது 400 கொடுப்பதை, கையும் களவுமாக பிடித்து, அந்த பணத்தை பறிமுதல் செய்தால், கண்டிப்பாக இவர்களுக்கு 60 ஆயிரத்துக்கு மேல் பணம் வைத்திருப்பவர்களையும் பிடிக்க முடியும் வழக்கும் போட முடியும் ஆனால் இவர்கள் பணிபுரியும் லட்சணம் உலகம் அறிந்தது இவர்கள் அரசியல்வாதிகளிடம், குறிப்பாக ஆளும் கட்சியிடம், எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை மிக விரிவாக ஊடகங்கள் எடுத்துக்காட்டியது ஆதாரம் கொடுத்தால் கூட ,இவர்கள் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி பணத்தை திருப்பி தர மாட்டார்கள் ஏனென்றால் இவர்களுக்கு ஒவ்வொரு நாளும் இத்தனை வழக்குகள் பதிய வேண்டும் என்பது நிர்ப்பந்தம் இவர்கள் ஆளுங்கட்சி நபர்களை சோதனை செய்து பிடித்தால் இவர்களுக்கு மேலிடத்திலிருந்து உடனே தொலைபேசி வரும் இவர்களை மட்டும் குறை சொல்லி பயனில்லை தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் இந்த ஊழியர்கள் அந்த அரசியல்வாதிகளின் கீழ் தான் பணி புரிய வேண்டும் எனவே அவர்களால் அரசியல்வாதிகளை பகைத்து கொள்ள முடியாது இது மட்டுமல்ல இன்னும் வரும் நாட்களில் நடக்கப் போடும் நடக்கப்போகும் அத்தனை அட்டூழியங்களையும் இவர்கள் கண்மூடி, வாய் புத்தி, கைகட்டி நிற்க போவதை நாம் காணத்தான் போகிறோம் நமது தலைமை தேர்தல் ஆணையர் திரு சத்ய பிரசாத் சாஹூ அவர்களை நான் பல வருடங்களாக கவனிக்கிறேன் வீர வசனங்கள் அற்புதமாக பேசுவார் கடுமையான அறிக்கை விடுவார் ஆனால் பண பட்டபாடு செய்யும் போது புகார் வந்தாலும் கண்டுகொள்ள மாட்டார் மிக அதிகமாக அழுத்தம் வந்தால் பேரளவில் வழக்கு பதிவு செய்வார் தேர்தல் முடிந்தவுடன் அவற்றை ஊத்தி மூடி விடுவார் இவரைப் பற்றி அனைவரும் அறிவார்கள் இதே தேர்தல் கமிஷனில் மறைந்த மரியாதைக்குரிய திரு டி என் ஷேஷன் அவர்கள் இருந்தபோது அனைத்து அரசியல்வாதிகளும் எதுவும் செய்ய முடியாமல் திகைத்து நின்றார்கள் தேர்தல் கமிஷன் அதிகாரம் என்ன என்பதை அவர் அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் உணர்த்தினார் இன்னும் சில நாட்களில் பண பட்டுவாடா நடக்கும் தேர்தல் அதிகாரி கண்ணை மூடிக்கொள்வார் இப்பொழுது கூட மக்களை அடைத்து வைக்க கரூரில் பட்டி ரெடி என செய்தி படித்தேன் எதையும் இந்த தேர்தல் ஆணையம் கண்டு கொள்ள மறுக்கும்


ATM City
ஏப் 07, 2024 13:38

போட்டோவிற்கு போஸ் கொடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் ஆறாவது அறிவை பயன்படுத்துவது இல்லை சுயபுத்தியும் சுத்தமாக கிடையாது அதிலும் காவல்துறையை சார்ந்தவர்கள் உண்மையிலேயே ஏதோ பெரிய சாகசத்தை செய்தது போல கேவலமாக இருக்கிறது தேர்தலில் பிச்சை எடுப்பது போல கெஞ்சி ஓட்டு வாங்கி வெற்றி பெற்றபின் அவர்களின் கொள்ளை தாங்க முடியவில்லை


rsudarsan lic
ஏப் 07, 2024 13:05

She should not leave the matter Within days the officials should get suspended either by election commission or state government


அப்புசாமி
ஏப் 07, 2024 10:28

திருட்டு இந்தியர்கள் எல்லா துறைகளிலும் இருக்காங்க....


S. Gopalakrishnan
ஏப் 07, 2024 10:27

நவி மும்பையில் உள்ள என் வீட்டில் இருந்து மும்பைக்கு (60 கி. மீ. ) நான் மூன்று நாட்கள் முன்பு ரூபாய் மூன்று லக்ஷம் இதே நோக்கத்துக்காக - சம்பளம் பட்டுவாடா செய்ய - எடுத்துக் கொண்டு காரில் சென்றேன். இங்கு இப்படிப் பட்ட சோதனைகள் நடப்பதில்லை. தமிழகத்தில் திருமங்கலம் தேர்தலுக்குப் பின் தேர்தல முறையே மாறிவிட்டது. என்ன இருந்தாலும் மேற்கொண்டு பத்து ரூபாய் சேர்க்க வைத்து பறிமுதல் செய்வது, உதகமண்டலத்தில் பஞ்சாபி குடும்பத்திடம் இருந்து பறிமுதல் செய்வது ஆகியவை நம் அதிகாரிகளின் குரூர புத்தியை காட்டுகிறது. இதைக் கேள்விப்பட்ட பின் பஞ்சாபிலிருந்து சுற்றுலா பயணிகள் தமிழகத்தை தவிர்க்க மாட்டார்களா ?


ديفيد رافائيل
ஏப் 07, 2024 08:24

அரசு அதிகாரிகள் இப்படி தான் கேவலமான மானங்கெட்ட பிழைப்பு பிழைக்குறாங்க கண்டிப்பா இவங்களோட ஜெனெரேஷன் நாசமா தான் போகும்


Sivaswamy Somasundaram
ஏப் 07, 2024 08:09

அவர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்து விரட்டப்படுகின்றனர் ? அவர்கள் இலக்கை அடைய என்னென்னவோ செய்கிறார்கள் ஓட்டுக்கு லஞ்சம் கொடுப்பதைத் தடுத்து நேர்மையாகத் தேர்தல் நடத்தியதாக நம்ப வைக்கணுமே எய்தவன் இருக்க அம்பை நோவதால் பயனில்லை


VENKATASUBRAMANIAN
ஏப் 07, 2024 07:53

தமிழக காவல்துறை இப்படி கேவலமாக போய்விட்டது அதிகாரிகளும் அப்படியே உள்ளனர்


Kanns
ஏப் 07, 2024 07:48

Spot Suspend, Prosecute& Convict within month Video Evidence No Mercy for Power Misusing Rulers- Rulers-Stooge Officials


karunamoorthi Karuna
ஏப் 07, 2024 07:34

கோவையில் தெப்பக்குளம் பகுதியில் நேற்று திமுக கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு ரூ200 கொடுத்து ஆட்களை அழைத்து வந்தார்கள்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை