உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிளாம்பாக்கம் பஸ் நிலையம், செங்குன்றம் கிடங்கில் ரூ.70 கோடி போதை பொருள் பறிமுதல்

கிளாம்பாக்கம் பஸ் நிலையம், செங்குன்றம் கிடங்கில் ரூ.70 கோடி போதை பொருள் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை மையமாக வைத்து, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்; அவர்களிடம் இருந்து, 70 கோடி ரூபாய் மதிப்புள்ள, 'மெத்தாம்பெட்டமைன்' போதைப் பொருளையும் பறிமுதல் செய்தனர். சென்னையில் இருந்து, பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில், கும்பல் ஒன்று போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகவும், புதிதாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை மையமாக வைத்து அக்கும்பல் செயல்படுவதாகவும், மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, சென்னை மண்டல இயக்குனர் அரவிந்தனுக்கு தகவல் கிடைத்தது.

சோதனை

இதையடுத்து, தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சென்னை முழுதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடந்த 24ம் தேதி, கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில், பயணி போல சந்தேகப்படும் வகையில் நின்ற, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பைசல் ரஹ்மான், 38, என்பவரை, அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். உடன், அவர் வாகனம் ஒன்றில் ஏறி தப்பிக்க முயன்றார். இருப்பினும், அதிகாரிகள் மடக்கிப் பிடித்து, அவரின் உடைமைகளை சோதனை செய்தனர்.

விசாரணை

அதிலிருந்த 5.970 கிலோ மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் மற்றும் 7 லட்சம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்ததுடன், பைசல் ரஹ்மானையும் கைது செய்தனர்.விசாரணையில், அவரின் கூட்டாளிகள், சென்னை அருகே செங்குன்றம் பகுதியில், குடோன் ஒன்றில் போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார். அவருடன், 27ம் தேதி இரவு, அந்த இடத்திற்கு சென்ற அதிகாரிகள், சென்னையைச் சேர்ந்த மன்சூர், 40; ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இப்ராஹிம், 36, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 954 கிராம் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். மூவரிடமும் பிடிபட்ட போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு 70 கோடி ரூபாய்.இவர்கள் சென்னையில் இருந்து, ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதன் பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளிகளையும் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

கடத்தல் கூடாரமாகிறது

புதிதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பஸ் நிலையம், போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் கூடாரமாக மாறி வருகிறது. அங்கு, சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகின்றன. தற்போது சிக்கியுள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த மூவரும், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் ரகசிய கூட்டங்கள் நடத்தி உள்ளனர். இங்கிருந்து தான், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல், பஸ் பயணியர் போல, துாத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு, கஞ்சா, மெத்தாம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக, மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், பஸ் நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

குறை ஒன்றுமில்லை இறைவனே
ஜூலை 30, 2024 13:11

Look at the names of the people. Their mainaim is ti destroy the hindus.


karthik
ஜூலை 30, 2024 10:50

ஜாபர் சாதிக்கின் வளர்ப்பாகத்தான் இருக்கும்..


Karuppiah
ஜூலை 30, 2024 07:52

சட்ட விரோதிகளுக்கு கடுமையான மரண தண்டனை கொடுக்காதவரை மத்தவங்க திருந்த வாய்ப்பே இல்லை போல் தெரிகிறது.


N.Purushothaman
ஜூலை 30, 2024 07:45

ஆட்சி கலைப்பு தான் ஒரே சிறந்த வழி. மெத்தப்பட்டமைன் எல்லாம் ஒரு காலத்தில் பலருக்கும் தெரியாது...ஆனால் தற்போது பள்ளி மாணவர்களுக்கு கூட தெரியுமளவிற்கு தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் காட்டாற்று வெள்ளம் சென்று கொண்டு இருக்கிறது .....தீயவர்களுக்கு ஓட்டு போட்டு தமிழக்தை குட்டிச்சுவராக்கிய வாக்காளர்களுக்கு நன்றி ....


Pandi Muni
ஜூலை 30, 2024 07:15

மூர்கனுக்களுக்கு நேர்மையான தொழிலே தெரியாதா. தெரிஞ்சாலும் செய்யமாட்டானுங்களா


gopalasamy N
ஜூலை 30, 2024 06:38

கிளம்பாக்கம் பஸ் நிலையம் அரசால் பல எதிர்ப்புக்கு இடையே திறக்க பட்டத்தின் உண்மை வெளி வந்து உள்ளது திராவிட முதுமை arasu


sankaranarayanan
ஜூலை 30, 2024 06:14

பேருந்து நிலையங்களில் பேருந்துக்களை காணோம் ஆனால் போதைமருந்து மூட்டைகள்தான் கண்டெடுக்கப்படுகின்றன இனி பேருந்துகளில் போதைப்பொருட்கள் சகஜமாக பிரயாணம் செய்யலாம்


Mani . V
ஜூலை 30, 2024 05:49

என்ன இரும்புக்கை கோப்பால் இதெல்லாம்?


Kasimani Baskaran
ஜூலை 30, 2024 05:30

மத்திய போதைப்பொருள் தடுப்பு ஆட்களுக்கு தெரிந்த ரகசியம் லோக்கல் போலீசுக்கு தெரியாது என்பதுதான் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.


Karuthu kirukkan
ஜூலை 30, 2024 06:48

லோக்கல் போலீசுக்கு தெரியும் ஆனா தெரியாது. ....


Natarajan Ramanathan
ஜூலை 30, 2024 02:29

எந்த ஒரு நேர்மையான தொழிலும் செய்யவே தெரியாத மூர்க்கமதம்.


மேலும் செய்திகள்











புதிய வீடியோ