உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.20 ஆயிரம் லஞ்சம்: கூடலூர் தாசில்தார் கைது

ரூ.20 ஆயிரம் லஞ்சம்: கூடலூர் தாசில்தார் கைது

கூடலூர்:கூடலூரில், நில அளவை பணிக்காக, 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற, கூடலூர் தாசில்தார் ராஜேஸ்வரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.நீலகிரி மாவட்டம், கூடலூர் தாசில்தாராக பணியாற்றி வருபர் ராஜேஸ்வரி. இவர் பல்வேறு, பணிக்காக பொதுமக்களிடம் லஞ்சம் பெறுவதாக தொடர்ந்து புகார் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், தோட்டமூலா பகுதியை சேர்ந்த உம்முசல்மா, என்பவர் நிலத்தை அளவீடு செய்வதற்காக ஐகோர்ட் உத்தரவு பெற்றுள்ளனர். இப்பணிக்காக அவர், கூடலூர் தாசில்தார் ராஜேஸ்வரியை அணுகி உள்ளார். இதற்காக, உம்முசல்மாவிடம் இரண்டு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற சம்மதம் தெரிவித்துள்ளார்.லஞ்சம் கொடுக்க விரும்பாத, உம்மு சல்மாவா ஊட்டி லஞ்சம் கொடுக்கும் போலீசில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசர் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் அறிவுரைப்படி, இன்று, இரவு உம்மு சல்மா கூடலூர் தாசில்தாரிடம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார். ஊட்டி லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் பரிமளாதேவி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்ச பணத்துடன் தாசில்தாரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

babu
ஜூலை 12, 2024 14:37

இவர்களை அரசு வேலையில் இருந்து தூக்கி விட்டு அவர்கள் எப்பொழுது வேலையில் சேர்ந்தார்களோ அன்றைய தினத்தில் இருந்து கைது செய்யப்படும் நாள் வரை வாங்கிய சம்பளதினில் 50 விழுக்காடு பணம் அபராதமாகவும் மேலும் இவர்களுக்கு மற்றும் இவர்கள் குடும்பத்திற்கு எந்த ஒரு அரசு உதவிகளும் மற்றும் சலுகைகளும் வழங்கக்கூடாது. மேலும் இவர் இந்த பணியில் எப்பொழுதும் சேர தகுதி இல்லை என்றும் சான்று அளித்து கடுங்காவல் தண்டனை அளிக்க வேண்டும். காவலில் இருந்து ஜாமீனில் வெளிவர முடியாத அரசாணை பிறப்பிக்க வேண்டும்.அப்போது புரியும் அரசு வேலையின் முக்கியமான புனிதம் என்னவென்று. கால்கடுக்க வயதாகியும் கால்காசு அரசு வேலையில் சேர்ந்து சம்பாதிக்க வேண்டும் என்று எவ்வளவோ பேர் குடும்பத்தை விட்டு பெற்ற பிள்ளைகளை விட்டு வேற ஊர்களுக்கு செல்ல முடியாமல் சென்று வருடக்கணக்கில் படித்து தேர்வு எழுதி வருகின்றனர். ஆனால் அரசு வேலையில் இருக்கும் இவர்களை போன்ற சிலர் இப்படி கீழ்த்தரமாக நடக்கின்றனர்.


RENGANATHAN MUTHUKRISHNAN
ஜூலை 12, 2024 13:05

எவ்வித பணப்பயனும் இன்றி உடனடியாக பணிநீக்கம் செய்யப்படவேண்டும்.


KARUPPASAMY MANGUDI MAINAR
ஜூலை 12, 2024 10:06

ஏன் இப்படி அரசு அதிகாரிகள் பிச்சை எடுக்கிறார்கள்


Suriyanarayanan
ஜூலை 12, 2024 09:38

தமிழகத்தில் ஊழல் மேல் மட்டத்தில் இருந்து ஆரம்பம், தலையில் கைவைத்து பொரி வைத்து பிடித்தால் வால் ஆடி மயக்கத்தில் இருந்து சரியாக வேலை பார்க்கும் தாசில்தார் அவர்களை நன்றாக கவனித்து விசாரித்தால் மேல் மட்டத்தில் உள்ளவரை பிடிக்கலாம். இப்படி ரசாயனம் வைத்து பிடி பட்டவர்களை அவரின் போட்டோவுடன் அவர் வீட்டு வாசலில், அந்த ஊரில், அலுவலகத்தில் பல இடங்களில் பேனர்கள் வைக்க வேண்டும். அதை பல பத்திரிகைகளில் காட்ட வேண்டும். நன்றி வணக்கம்


Rangarajan
ஜூலை 12, 2024 03:47

மிக மிக வருத்தமாக இருக்கிறது. நல்லசம்பளம் வருகிறது எதற்கு கிம்பளம் வேறு வெட்கக்கேடான விஷயம்


Kumaraguru Singaram
ஜூலை 12, 2024 08:23

ஆசை .. பேராசையாகும் பொது வெட்கம் விடுமுறை எடுக்கும்


Anantharaman Srinivasan
ஜூலை 11, 2024 23:53

தாசில்தார் ராஜேஸ்வரியை பார்த்தால் பிராமண லேடி மாதிரி தெரிகிறது. பழி பாவத்துக்கு அஞ்சும் பிராமண பெண் ஊழியர்கள் கூட கை நீட்டி வாங்க ஆரம்பித்து விட்டனரா..?? கலிகாலம்.


Kumaraguru Singaram
ஜூலை 12, 2024 08:22

அது எப்படி முகத்தை பார்த்து அவுங்க அந்த ஜாதி தான்னு முடிவு பண்றிங்க? மத்தவா எல்லாம் பழி பாவத்துக்கு அஞ்ச மாட்டாளா ?? எடுக்கறது பிச்சை இதுல என்ன கௌரவம் ??


மேலும் செய்திகள்