உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கணினி உதவியாளர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு

கணினி உதவியாளர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு

சென்னை:மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் கணினி உதவியாளர்களுக்கான சம்பளம், 16,000த்தில் இருந்து 20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளில், மத்திய அரசின் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், மாநிலம் முழுதும் 1,843 கணினி உதவியாளர், மாதம் 16,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் சம்பளத்தை, 20,000 ரூபாயாக உயர்த்தி வழங்கும்படி, ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர், அரசுக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்ற அரசு, கணினி உதவியாளர்களுக்கு, நேற்றுமுன்தினம் முதல் மாத சம்பளம் 16,000 ரூபாயை, 20,000 ரூபாயாக உயர்த்தி வழங்க அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணையை, ஊரக வளர்ச்சித்துறை செயலர் செந்தில்குமார் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை