| ADDED : மார் 31, 2024 03:13 AM
தேனி: தேனி பங்களாமேடு, புது பஸ் ஸ்டாண்டில் 'நவீன மனிதர்கள் அமைப்பு' என கூறிக்கொண்ட இளைஞர்கள் ஆண்டவர், ஜெயராஜ், உதயசூரியன் அனுமதியின்றி, 'போதும் மோடி, பை... பை... மோடி' என்ற பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டனர்.இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த பா.ஜ., நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு செல்லும் முன் கோஷங்களை எழுப்பிய இளைஞர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் அவர்கள் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கோஷமிட்ட வாலிபர்கள் கண்டித்தும், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தேனி தேர்தல் நடத்தும் அலுவலர், எஸ்.பி.,யிடம் ஏப்., 1ல் புகார் அளிக்க உள்ளதாக பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.