உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில் வளம் கொள்ளை: ஹிந்து முன்னணி கண்டனம்

கோவில் வளம் கொள்ளை: ஹிந்து முன்னணி கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர் : ஹிந்து கோவில்களின் நிலங்களில், 200 கோடி மதிப்பு கனிம வளங்கள் கொள்ளை போனதற்கு ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:

பக்தர்களிடம் பலவித கட்டணங்களை வசூலிக்கும், அறநிலையத் துறை, ஹிந்து கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களில், 198 கோடியே 65 லட்சத்து 28,000 ரூபாய் மதிப்பு கனிம வளங்கள் திருடப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.கனிம வளங்கள் கொள்ளைபோகும் வரை வேடிக்கை மட்டும் பார்த்த அறநிலையத் துறையின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது. அதிகாரிகள் துணையின்றி வளங்கள் கொள்ளையடிக்கபட்டு இருக்க முடியாது.கோவில்களின், 200 கோடி ரூபாய் மதிப்புள்ள வளங்களை கொள்ளையடிக்க துணைபோன அனைத்து அதிகாரிகளையும், அமைச்சரையும் நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும். இனி, இதுபோல நடைபெறாமல் தடுக்க, கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sampath Kumar
ஜூலை 24, 2024 11:54

உங்க கும்பல் அடித்து உள்ள கொள்ளையில் இது வரும் ஜுஜுபி கோவில் கட்டின காலத்தில் இருந்து கொள்ளையோ கொள்ளை தாண்ட அதுக்கு என்ன சொல்லுறா


Ganesun Iyer
ஜூலை 24, 2024 11:49

ஹிந்து கோவில்னா என்னமா திரவிடயனுக்கு முட்டு குடுக்குது....


sundarsvpr
ஜூலை 24, 2024 11:42

திருக்கோயில் சொத்து ஆண்டவன் சொத்து ஆண்டவன் சொத்து என்றால் அவன் பாதுகாக்கவேண்டும். அல்லது அவன் பிரிதிநிதி அறம் காவலர் குழு நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் அறம் காவலர்கள் இல்லை. ஆண்டவன் எட்டாத இடத்தில உள்ளான். பூனைக்கு யார் மணி கட்டுவது? அரசு கோயில்சொத்தை சுரண்டுகிறது. பக்தர்கள் யார் ஆண்டால் என்ன வேடிக்கை பார்க்கிறார்கள். அறநலத்துறை நீதிமன்ற தீர்ப்பை மதிப்பது இல்லை. ஏன் திருக்கோயில்களை முழு சொத்துக்களும் ஆன்மீக பக்தியுள்ள ஹிந்துக்களிடம் ஏலம் விடக்கூடாது.?


Barakat Ali
ஜூலை 24, 2024 08:55

ஒன்றியத்துல ஹிந்துத்வா பேசுற வலிமையான பாஜக அதிகாரத்துல இருக்குது... அதுவும் மூணாவது தடவையா.. இந்த லட்சணத்துல இவரு டுமீலு நாட்ல சங்கிலிய புடிச்சு ஆட்டிக்கிட்டு இருக்காரு ..... எனக்கு சிப்பு சிப்பா வருது .....


மேலும் செய்திகள்









புதிய வீடியோ