உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அறநிலையத்துறை அலட்சியத்தால் கோவில்களில் திருட்டு

அறநிலையத்துறை அலட்சியத்தால் கோவில்களில் திருட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர் : 'அறநிலையத் துறை, வருமானத்தை மட்டும் குறிக்கோளாய் கொண்டு செயல்படாமல், கோவில்களின் பாதுகாப்புக்கும் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்' என ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவில்களின் உண்டியல் திருட்டு தொடர்ந்து நடந்து வரும் நிலையில், ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளும், தமிழக அரசும் இது குறித்து கொஞ்சமும் கவலை கொள்வதாக தெரியவில்லை. சமீபத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில், ஒரே இரவில் மட்டும், எட்டு கோவில்களின் உண்டியல்களை உடைத்து திருட்டு நடந்துள்ளது.கோவிலை குறிவைத்து நடக்கும் குற்ற செயல் நாளுக்குநாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. கோவில் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு கருதி, 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட வேண்டும். கோவில் பாதுகாப்பு போலீசார் என, பிரத்யேகமான காவல்படை உருவாக்கப்பட வேண்டும். அறநிலையத் துறை, வருமானத்தை மட்டும் குறிக்கோளாய் கொண்டு செயல்படாமல், கோவில்களின் பாதுகாப்புக்கும் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 19, 2024 12:55

தூங்குபவனை எழுப்பலாம் தூங்குவது போல் நடிப்பவனை எழுப்ப முடியுமா? திருடனை இனம் கண்டு பிடிக்கலாம். நல்லவன் போல் இருந்தது கொண்டு இருக்கும் திருடனை கண்டுபிபடிப்பது மிக சிரமம். வேங்கை வயல் சம்பவமே இன்னும் கண்டுபிடித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதையே வெகு சாதாரணமாக எடுத்துக் கொண்டு மக்கள் திமுக ஆட்சியில் தமிழகம் மகிழ்ச்சியுடன் இருக்கிறது என்று நாற்பதுக்கு நாற்பது கொடுத்து வாழ்த்தியுள்ளார்கள். இந்த மக்களை வைத்து கொண்டு திருட்டை எப்படி தடுக்க முடியும். திருடனை எப்படி பிடிக்க முடியும். செல்லூர் ராஜூ வேறு திமுகவின் ஸீலீப்பர் செல்லாக அதிமுகவில் இருந்து கொண்டு காங்கிரஸ் ராகுல் காந்தியை பாராட்டி கொண்டு காங்கிரஸ் கட்சி உடன் திமுக கூட்டணியில் உள்ளதால் மறைமுகமாக திமுகவை பாராட்டுகிறார். இப்படி அனைவரும் பாராட்டும் திருடனை எப்படி பிடிப்பது திருட்டை எப்படி தடுப்பது.


subramanian
ஜூன் 19, 2024 11:08

நிலத்தடி நீர், மணல், கனிமங்கள், மலை, காடு, கோவில் உண்டியல், கோவில் கட்டிடம், கோவில் விவசாய நிலங்கள், கோவில் நகைகள், சொத்து எல்லாம் திமுக நோகாமல் திருடும் இடங்கள். அழிக திமுக. கொட்டம் குலையட்டும். திமுக ஊழல்கள் அம்பட்டம் ஆகட்டும். நாடு நலம் பெறட்டும்.


அசோகன்
ஜூன் 19, 2024 10:29

என்னது அலட்சியமா? போங்க பாஸ் கிண்டல் பண்ணாதீங்க..... திருடறதே நாங்கதான்... ஓ திருட்டை அலட்சியமா செய்யக்கூடாதுனு சொறீங்களா ??


M.COM.N.K.K.
ஜூன் 19, 2024 09:28

கடவுள் இல்லை என்று சொல்பவர்களிடம் இதையெல்லாம் எப்படி எதிர்பார்க்கமுடியும்


Sampath Kumar
ஜூன் 19, 2024 08:44

இந்த அய்யோக்கிய கும்பலின் அடாவடி செய்கைக்கு அரசு முற்றுப்புள்ளி நிச்சயம் வைக்கும்


GMM
ஜூன் 19, 2024 07:55

போலீசுக்கு பணி ஒதுக்கீடு இஷ்டம் போல் இருப்பது தெரிகிறது. மாவட்ட காவல் நிலையம் தன் பகுதியில் உள்ள கோவில், வங்கி, கருவூலம், கலெக்டர் அலுவலகம், பொது பணி கீழ் வரும் குளம், அணைக்கட்டு, அரசு நிலம் போன்ற முக்கிய அரசு இடங்களின் முதன்மை பாதுகாப்பு பொறுப்பு பொலிஸார்கள் நியமிக்க வேண்டும். மூன்று மாதம் ஒருமுறை மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை தர வேண்டும். அரசு ஊழியர்கள் போல் இடம் மாறும்போது பொறுப்பை ஏற்கும் போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். இங்கு குற்றம் நடந்தால் இவர்கள் பாதுகாப்பு பணி குறைபாடு என்று கருத வேண்டும். மத்திய பாதுகாப்பு படை குற்றம் அதிகம் நிகழும் மாவட்டங்களில் நியமிக்க வேண்டும்.


pandit
ஜூன் 19, 2024 06:14

அலட்சியமாக? உடந்தையா?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை