உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமருக்கு எதிராக வேட்பு மனு: கிளம்பிய விவசாயிகளுக்கு சிக்கல்

பிரதமருக்கு எதிராக வேட்பு மனு: கிளம்பிய விவசாயிகளுக்கு சிக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்: பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில், 111 பேர் போட்டியிட போவதாக அறிவித்தனர்.இதையடுத்து, கன்னியாகுமரி - பனாரஸ் காசி தமிழ் சங்கமம் ரயிலில், சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 120 பேர் நேற்று புறப்பட்டனர். இதற்கிடையே, தொழில்நுட்ப கோளாறு எனக்கூறி, ஒரு பெட்டியை குறைத்து, அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளின் முன்பதிவு ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே ஊழியர்கள் கூறினர். இதனால், தஞ்சாவூர் ஸ்டேஷனில் காலை, 6:43 மணிக்கு ரயில் புறப்பட இருந்த நேரத்தில் அபாய சங்கிலியை இழுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ரயில்வே அதிகாரிகள், போலீசார் பேச்சு நடத்தி, விழுப்புரத்தில் தனி பெட்டியை இணைத்து விவசாயிகள் பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். ஆனால், விழுப்புரம், செங்கல்பட்டில் 'கோச்' கொடுக்காத நிலையில், அய்யாக்கண்ணு போராட்டத்தில் ஈடுபட்டார். அனைவரும் செங்கல்பட்டில் இறக்கி விடப்பட்டனர். இதனால் அவர்கள் வாரணாசி செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அய்யாக்கண்ணு கூறுகையில், ''வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து 111 பேர் போட்டியிட முடிவு செய்தோம். வேட்பு மனு தாக்கல் செய்ய புறப்பட்டு சென்றோம். எங்களுக்கு 'எஸ் - 1' பெட்டி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மே 9ம் தேதி எஸ்.எம்.எஸ்., வந்தது. நேற்று திடீரென முன்பதிவு பெட்டி பழுதாகிவிட்டதாக கூறி முன்பதிவை ரத்து செய்துள்ளதாக கூறுகின்றனர்,'' என்றார்.ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'எஸ் 1 பெட்டி பயணியருக்கு மற்ற பெட்டியில் இடம் வழங்கப்பட்டது. சிலருக்கு வெயிட்டிங் லிஸ்ட் வந்தது. அவர்களுக்கும் ஆர்.ஏ.சி., முறையில் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இது தொழில்நுட்ப கோளாறு. தேர்தலுக்கு எந்த தொடர்பும் இல்லை' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 53 )

K r Madheshwaran
மே 14, 2024 10:04

அய்யாக்கன்னு ஒரு லூசுப்பையன் ஆட்சியாளர்களிடம் இணக்கமாக பேசி வசதிகளை பெற்று சாதிக்க வக்கில்லாதவன் அவனை பின்புலமாக யாரோ இயக்கி வருகிறார்கள் அவனும் முட்டாளைப் போன்று ஸ்டண்ட் அடிக்க அப்பாவி ஆட்களுக்கு தினக்கூலி கொடுத்து இப்படி பப்ளிசிட்டி செய்கிறான்


Natchimuthu Chithiraisamy
மே 13, 2024 16:45

திமுகவை எதிர்த்து செய்திருந்தால் உயிர் போயிருக்கும் புரிந்துகொள்ளுங்கள் விவசாயிகளே பணம் கொடுப்பவன் சொத்து என்ன என்று தெரிந்து கொள் காசுக்கு ஆடாதீர்கள் தமிழக விவசாயிகளை அவமான படுத்தாதீர்கள்


Kumar Kumzi
மே 13, 2024 15:11

இந்த தேசத்துரோகிகள் திருட்டு திமுகாவின் கொத்தடிமைகள்


Dharmavaan
மே 13, 2024 14:49

இவர்கள் கைக்கூலிகள் மோடிக்கு எதிராகஇங்கு இருப்பதாய் ஒழுங்குபடுத்திவிட்டாங்களா அதற்கு ஏன் மாநில அரசை எதிர்த்து போராட்டம் நடத்தவில்லை திருட்டு பச்சோந்திகள்


Venkat, UAE
மே 13, 2024 12:20

அய்யாக்கண்ணு தலைமையில் பேர் வாரணாசியில் மோடிக்கு எதிராக மனு தாக்க போறீங்களா? உங்கள் அனைவரின் போக்குவரத்து செலவு, தாங்கும் செலவு, சாப்பாட்டு செலவு மற்றும் வேட்புமனுவுக்கான டெபாசிட் தொகை, யாரப்பா ஸ்பான்சர்?


Dharmavaan
மே 13, 2024 14:56

எல்லாம் சகுனி வேலை செலவும் அவனுடையதே அய்யாக்கண்ணு இதை செய்யம் ப்ரோக்கர்


sethu
மே 13, 2024 12:12

ஆடிக்கார் அய்யாக்கண்ணு ஹாம்மர் கார் அய்யாக்கண்ணு என இந்த தேர்தலுக்குள் உயர்ந்துடுவார் போல இருக்கிறது அவரது வீரம் நம்மாழ்வார் பாவம் பிழைக்கத்தெரியாத உண்மையான விவசாயி வைரமுத்து வரிசைல அய்யாக்கண்ணு இயங்குவதால் டெல்லியை சுற்றி பார்க்க இவரோடு இருக்கும் சில விவசாயிகள் விரும்புகிறார்கள்


Nagercoil Suresh
மே 13, 2024 01:20

வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பார்கள் அதே போல நல்லக்கண்ணு கோமண டீமுக்கும் நடந்துள்ளது இவர்கள் அத்தம் போய்சேர்வர்களா இல்லை அந்த பெட்டி மட்டும் வேறு திசையை நோக்கி பயணிக்குமான்னு தெரியல்ல, ஆக்கப்பொறுத்தாச்சி இனி அறப்பொருத்துதான் ஆகணும், என்னதான் இருந்தாலும் தமிழர்களை பார்த்து டெல்லி பயப்படத்தான் செய்கிறது


S.SRINIVASAN
மே 12, 2024 11:21

ஏன் அய்யாக்கன்னு உனக்கு எவ்வளவு கொடுத்தானுங்க உங்க வேலை வெட்டி இல்லாத உடன்பிறப்புக்கள் மண் குதிரையை நம்பி ஆத்துல இறங்காதீங்க கடவுள் இருக்கிறார் சாப்பிட கஞ்சி இல்ல குடிக்க தண்ணீர் கூட கொடுக்க மாட்டார் உங்கள மாதிரி கபடவேடதாரிகளுக்கு நீங்கள் நினைக்கிற மாதிரி மோடி ஒன்றும் ஊர் உடமையை தின்றவர் இல்ல தமிழக முதல்வர் மாதிரி. விவசாயிகளை தெய்வமா மதிக்கிறது அவர் ஒருத்தர் தான் அவர்கிட்ட பகைத்தீர்களேயானால் ஆடி கார் ஐயக்கண்ணு உனக்கு ...


a.s murthy
மே 12, 2024 10:25

ஐந்து பக்கத்தில பூஜ்யம் பணம் வாங்கியாச்சு மாசம் முந்தியே வாங்கினதுக்கு தேர்தலுக்கு முந்தியே கணக்கு முடிக்கவே இந்த போராட்ட நாடகம்


Venkates.P
மே 12, 2024 07:48

இந்த ஆடி காரு அய்யாக்கண்ணு என்கிற கொசு தொல்ல தாங்க முடியலே


மேலும் செய்திகள்