உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது உங்கள் இடம்: கமலின் சுயமரியாதையாவது மிஞ்சட்டும்!

இது உங்கள் இடம்: கமலின் சுயமரியாதையாவது மிஞ்சட்டும்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உலக, தேசிய, தமிழக நடப்புகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்:

குரு பங்கஜி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தன்னுடைய தன்னிகரற்ற நடிப்பால் தனி முத்திரை பதித்து, சகலகலா வல்லவனாக தமிழ் திரை உலகில், மூன்று தலைமுறையாய் ஜொலிக்கும் பத்மஸ்ரீ கமல்ஹாசனின், தற்போதைய நிலையை பார்க்கும் போது வருத்தமாக உள்ளது.'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும், மணம் உண்டு' என, பகுத்தறிவு, சுயமரியாதை, நாத்திகம் என பேசித் திரிந்த கமல், ஒரு ராஜ்ய சபா சீட்டுக்காக தன்மானத்தை அடகு வைத்தது, வியப்பாகவும், விந்தையாகவும் உள்ளது!இந்த விஷயத்தில் கமல், இசைஞானி இளையராஜாவிடம் பாடம் கற்றிருக்க வேண்டும்.ராஜ்யசபா எம்.பி., பதவியானது, தன்னை தேடி வரச் செய்த இளையராஜா எங்கே... இலவு காத்த கிளியாக காத்திருந்து, ஒன்றிரண்டு எம்.பி., சீட்டுக்கு ஆலாய் பறந்து, மூக்குடைபட்ட கமல்ஹாசன் எங்கே!இதுவரை கமலை நம்பி ஓட்டளித்த, படித்த வாக்காளர்களும், ஒரு சீட்டுக்காக மண்டியிடும் இவரை கண்டு நொந்து, கை கழுவி விடுவர்!உலக நாயகனாக, உச்சாணிக்கொம்பில் இருந்த கமல்ஹாசன், இனியும் சுயமரியாதை, பகுத்தறிவு, தன்மானம் போன்றவற்றை பேசி, ஒரு புண்ணியமும் இல்லை!சந்தி சிரிக்காமல் இருக்க வேண்டும் எனில், கலை உலகு இவரை மீண்டும் அரவணைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Irulayeedevi S
ஏப் 08, 2024 10:43

கமலஹாசன் அப்பா அவர்களுக்கு மகள் இருளாயி தேவி எழுதுவது இந்த உலகத்தில் பெண்களுக்கான சுயமரியாதை அதாவது குழந்தை முதல் முதியவள் வரை பாலியல் வன்முறை நடக்காமல் எப்போ இந்த சட்டம் சொல்லப்படுதோ தவறு செய்யும் ஆணாக இருந்தாலும் சரி தவறு செய்யும் பெண்ணாக இருந்தாலும் சரி தக்க தண்டனை இந்த அரசாங்கம் குடுக்கும்வரை இந்த உலகத்தில் எந்த ஆணும் ஒழுக்கம் அற்றவர்கள் இதில் கமல்ஹாசன் அப்பாவை குறைக்கூற யாருக்கும் இடமே இல்லை


Irulayeedevi S
ஏப் 08, 2024 10:37

கமலஹாசன் அப்பா அவர்களுக்கு மகள் இருளாயி தேவி எழுதுவது இந்த உலகத்துல எந்த நீதியும் உண்மையாக இல்லை அப்படி இருந்தால் நான் ஜாதி மதம் பாராமல் இந்த உலகத்துல இருக்கிற குழந்தை முதல் முதியவள் வரை அனைத்து பெண்மணிகளுக்கும் சுதந்திரம் கிடைத்துவிட்டதா எந்த அரசாங்கம் எந்த சட்டம் தரும் இந்த பெண்மணிகளுக்கு சுயமரியாதை திட்டம் இதர்க்கு பதில் சொல்லிட்டு கமலஹாசன் அப்பாவை குறைக்கூறுங்கள்


R Thangavel
ஏப் 05, 2024 22:04

இவருக்கு சுயமரியாதை ஒரு கேடு. காசுக்கு கூலி வேலை செய்பவர்


கண்ணன்
ஏப் 05, 2024 10:19

படிப்பறிவற்றவனுக்கு சுயமரியாதை ஏன் என்று இவர் இருக்கலம் ஆனால் சுய மரியாதை உள்ள ஏழைகள் பலருண்டு.


J.V. Iyer
ஏப் 05, 2024 06:15

இவருக்கு சுயமரியாதை இல்லாததால்தானே திமுகவிடம் அடிமையாக உள்ளார் இவரிடம் இருப்பது கோமாளித்தனம் ஒன்றுதான்


தனி
ஏப் 05, 2024 05:57

அதென்ன உலக நாயகன் , இப்படி சொல்லும்போது இந்த ஆளுக்கு வெட்கமே கிடையாதா??? மானெகெட்ட இந்த பதவி தேவையா?? பேராசை !!!!


Sudarsanan Alagiya
ஏப் 05, 2024 02:56

தனி நபர் ஒழுக்கம் இல்லவதவர் கொஞ்சம் உள்ள மரியாதையை காப்பாற்றி கொள்ளட்டும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை