உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளிகளுக்கு இன்று முழு வேலை நாள்

பள்ளிகளுக்கு இன்று முழு வேலை நாள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகம் முழுதும் அனைத்து பள்ளிகளுக்கும், இன்று முழு வேலை நாள் என, அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் தனியார் பள்ளிகள், ஜூன் 3ல் திறக்கப்படுவதாக இருந்தது. பின், கோடை வெயில் மற்றும் தேர்தல் முடிவுகள் வெளியாக இருந்த காரணத்தால், பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டது.இதையடுத்து, ஜூன் 10ல் பள்ளிகள் திறக்கப்பட்டன. தாமதமாக திறக்கப்பட்டதால், விடுபட்ட நாட்களை வேலை நாட்களாக ஈடுகட்ட, சனிக்கிழமைகளில், வேலை நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் முழு வேலை நாளாகும். எந்த பள்ளியும் அரை நாள் மட்டும் பாடம் நடத்தி விட்டு, விடுப்பு அளித்து விடக்கூடாது. முழுநாளும் பாடம் நடத்த வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ