உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷன் கடைகளுக்கு நாளை வேலை நாள்

ரேஷன் கடைகளுக்கு நாளை வேலை நாள்

சென்னை:தமிழக ரேஷன் கடைகளில், சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ், துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படுகிறது. இம்மாதத்திற்கான கொள்முதல் தாமதமாக துவங்கியது. இதனால், 2.20 கோடி கார்டுதாரர்களுக்கு உரிய பொருட்கள் இன்னும் கடைகளுக்கு முழுதுமாக அனுப்பப்படவில்லை.இதனால் பருப்பு, பாமாயில் வாங்காமல் பலர் உள்ளனர். அவற்றை கடைகளுக்கு அனுப்பும் பணி நடக்கிறது. இதற்காக, நாளை ரேஷன் கடைகளுக்கு விடுமுறைக்கு பதில், பணி நாளாக அறிவித்து, உணவு துறை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, உணவு வழங்கல் துறை ஆணையர், கலெக்டர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், 'மே மாத சிறப்பு பொது வினியோக திட்ட பொருட்களின் இயக்கத்தினை, உரிய காலத்திற்குள் முடிக்க, அனைத்து ரேஷன் கடைகளுக்கும், 26ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது; அதற்கு ஈடான விடுமுறை பின்னர் அறிவிக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை