உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதுக்கோடையில் திருச்சி ரவுடி துரைசாமி சுட்டுக்கொலை

புதுக்கோடையில் திருச்சி ரவுடி துரைசாமி சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் போலீசாரை தாக்கிய திருச்சியைச் சேர்ந்த ரவுடி துரை சாமி என்பவரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்ற சம்பவம் நடந்தது.திருச்சி, வண்ணாரப்பேட்டை அருகே, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் துரை என்ற துரைசாமி, 42; இவர், புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று, ரவுடியை பிடிக்க முயன்ற போது, போலீஸாருக்கும் ரவுடிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், ரவுடி துரை போலீசாரை தாக்கி விட்டு, தப்ப முயன்றார். உடனே, போலீசார் பாதுகாப்பு கருதி துப்பாக்கியால் சுட்டதில், காயமடைந்த துரை, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இறந்தார். திருச்சி, புதுக்கோட்டை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், சரித்திர பதிவேடு குற்றவாளியான ரவுடி துரை மீது நான்கு கொலை வழக்குகள், கொள்ளை, திருட்டு, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக, போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். கடந்த ஆண்டு, பிப். 20ம் தேதி, திருட்டு வழக்கில் துரை மற்றும் அவரது தம்பி சோமசுந்தரம் ஆகியோரை திருச்சி போலீசார் கைது செய்தனர். அதன் பின், நகைகளை மீட்பதற்காக, அவர்ளை ஜீப்பில் அழைத்துச் சென்ற போது, புத்துார் குழுமாயி அம்மன் கோவில் அருகே, போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றனர். அப்போது, போலீசார் துரை மற்றும் சோமசுந்தரம் ஆகியோரது முழங்காலுக்கு கீழ் சுட்டு பிடித்தனர், என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

பால்சாமி
ஜூலை 12, 2024 11:40

ஓடவுட்டு சுட்டாலும், ஒக்காரவெச்சு சுட்டாலும் நாட்டுக்கு நன்மையே.


venugopal s
ஜூலை 11, 2024 22:48

இப்போது எல்லாம் பெரிய பெரிய ரௌடிகள் எல்லோரும் விபூதி சந்தனம் குங்குமம் என்று பக்திமான்களாகவே காட்சி அளிக்கின்றனர்.


தமிழ்வேள்
ஜூலை 11, 2024 21:15

திமுக கும்பலோடு ஒத்து போகாத காரணமாக என்கவுண்டர்... வேறு காரணங்கள் இல்லை


Barakat Ali
ஜூலை 11, 2024 19:59

உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக, போலீஸ் தரப்பில் தெரிவித்தனர் ....... ரெகுலரா வந்துக்கிட்டிருந்த தவணை ..... ஆனா ஜூலை மாசத்து தவணை வரலைன்னு கடுப்பாகி புடிக்கப்போனா எங்களையே தாக்கிட்டு ஓடப்பார்த்தான் .....


Nandakumar Naidu.
ஜூலை 11, 2024 18:43

தமிழகத்தில் உள்ள எல்லா ரவுடிகளையும் என்கவுண்டரில் போட்டுத்தள்ள வேண்டும். தேச, சமூக விரோதிகளையும் ஒடுக்க யோகி ஜி மாடலை பின்பற்ற வேண்டும்.


rama adhavan
ஜூலை 11, 2024 20:39

அப்போ ஒரு கட்சி வோட் குறைந்து விடுமே, பரவாயில்லையா?


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி