உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வி.சி., முன்னாள் நிர்வாகி சலீமிடம் ஈ.டி., விசாரணை

வி.சி., முன்னாள் நிர்வாகி சலீமிடம் ஈ.டி., விசாரணை

சென்னை : போதை பொருள் கடத்தல்காரர் ஜாபர் சாதிக்கின் மனைவியை அடுத்து, அவரது சகோதரர் சலீமிடமும் மூன்று மணி நேரம், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பெற்றனர்.வெளிநாடுகளுக்கு, 2,000 கோடி ரூபாய்க்கு மேலாக போதை பொருள் கடத்திய வழக்கில், தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், 35 மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேர் கைதாகி, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, ஜாபர் சாதிக் சகோதரர்கள் முகமது சலீம், 23; மைதீன், 23 ஆகியோருக்கு, 'சம்மன்' அனுப்பினர். இதை ஏற்று, சலீம் நேற்று காலை, 11:30 மணியளவில், சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள, அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடந்தது.முகமது சலீம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை துணை செயலராக இருந்தவர். இதையடுத்து, ஜாபர் சாதிக்கின் மற்றொரு சகோதரரும் நடிகருமான மைதீனிடம் விசாரிக்க இருப்பதாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ