உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொடியேற்றினார் விஜய்; கட்சி கொள்கைகள், பாடல் அறிமுகம்!

கொடியேற்றினார் விஜய்; கட்சி கொள்கைகள், பாடல் அறிமுகம்!

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய், சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று அறிமுகம் செய்தார். கொடியில் சிவப்பு, மஞ்சள் நிற கொடியில் இரண்டு போர் யானைகளுக்கு நடுவே வாகை மலர் இடம் பெற்றுள்ளது. கட்சியின் கொள்கைகள், எதிர்கால திட்டங்கள் அடங்கிய பாடலையும் வெளியிட்டார்.தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவக்கியுள்ள விஜய், 2026 சட்டசபை தேர்தலில் களமிறங்க உள்ளார். அதற்கு முன், கட்சியின் பெயர் மற்றும் கொடியை, மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை துவக்கி உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=niary4pk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன் ஒரு பகுதியாக, இன்று பொதுமக்களுக்கும், தொண்டர்களுக்கும் கட்சி கொடி அறிமுகம் செய்யப்பட்டது. பனையூரில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில், சற்று முன் கொடியேற்றி வைத்த விஜய், கட்சியின் கொள்கைகள், எதிர்கால திட்டங்கள் அடங்கிய பாடலை வெளியிட்டார்.

தமிழன் கொடி பறக்குது

'தமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பிறக்குது' எனத் தொடங்கும் கட்சியின் கொள்கை பாடலை விஜய் வெளியிட்டார். கொடியில் சிவப்பு, மஞ்சள் நிற கொடியில் இரண்டு போர் யானைகளுக்கு நடுவே வாகை மலர் இடம் பெற்றுள்ளது. நடிகர் விஜய்க்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்தனர்.

அன்பு தம்பிக்கு வாழ்த்து

சமூகவலைதளத்தில் சீமான் வெளியிட்டுள்ள பதிவில்,''தம்மை வளர்த்தெடுத்து, வாழ்வளித்த தாய்த்தமிழ்நாட்டு மக்களுக்குத் தன்னலமற்ற தொண்டாற்ற வேண்டும் என்ற புனித நோக்கத்தோடு, நேரடி அரசியல் களத்தில் தடம் பதிக்கத் துவங்கும், என் அன்புத்தம்பி தளபதி விஜய், தமிழக அரசியலில் வாகை சூட நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள்'' என குறிப்பிட்டுள்ளார்.

த.வெ.க., உறுதி மொழிகள்

* மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிப் பாதையில் பயணித்து, மக்களுக்கு கடமை ஆற்றுவேன்.* சாதி, மதம், பாலினம் என்ற வேற்றுமைகளைக் கடந்து, சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்போம் .* அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன் .* ⁠பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

நிக்கோல்தாம்சன்
ஆக 25, 2024 20:21

கார்பொரேட் வாரிசுக்கு தான் இனி யானைகளால் மிதிபடும் காலம் வரவேண்டும்


karthik
ஆக 23, 2024 11:09

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்... மீதி எங்க? வள்ளுவர் எழுதினதே 1-1/2 அடி ...அதையும் உங்க வசதிக்கு ஏத்த மாதிரி சுருக்கி ஊற ஏமாத்தறீங்க.


AMLA ASOKAN
ஆக 23, 2024 09:01

சிலருக்கு கெட்டகாலம் தானாக வரும் . சிலர் அதை விரும்பி செல்வதும் உண்டு . நீந்தத்தெரியாமல் குளத்தில் குதிப்பது ஒருவனது விருப்பம் . 7 கோடி மக்களில் 7 லட்ச ரசிகர்களை வைத்துக்கொண்டு தன்னை முன்னிலை படுத்த கட்சி ஆரம்பிப்பதும் , முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவதும் ஆடம்பர வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வு . அரசியல் பின்புலம் , அறிவாளிகளுடன் உறவு , அரசியல் தலைவர்ககளுடன் சந்திப்பு , மேடை பேச்சுத் திறமை . அரசியல் , பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது போன்ற சரித்திரம் எதுவும் இல்லை . பல கோடி ஆடம்பர கார்கள், சொகுசு பங்களாக்களில் வாழ்க்கை வாழ்வது , மழை, புயல் , வெள்ள கடும் பாதிப்புகளின் போது சாமானியனின் துயரங்களை கண்டுகொள்ளாதது , மக்களிடம் இருந்து 20 அடி தள்ளி நின்று கையை ஆட்டிவிட்டு போவது அவரது வாடிக்கை . இவை அனைத்தும் பொதுவெளியில் வெட்ட வெளிச்சம் . மக்களை முட்டாளாக நினைப்பது சினிமாவில் மட்டுமே சாத்தியம் . எந்த கொடியும் காற்றில் பறக்கத்தான் செய்யும் . ஆனால் கொடிமரம் இரண்டு யானைகளையும் தாங்கும் வலுவுள்ளதா என்பது ஆச்சரியம் கலந்த அதிசயம்


God yes Godyes
ஆக 23, 2024 08:24

கொட கிராப்புகார பசங்க விஜய்க்கு ஓட்டு போட இப்பவே துடிக்கிறானுவ.


ravi
ஆக 22, 2024 20:02

இந்த கட்சி சார்பில் ஆங்காங்கே வைத்துள்ள பேனரை சற்று உற்று நோக்கினால் தெரியும், முக்கால்வாசி பாதி மண்டையை பக்கவாட்டில் செதுக்கி திரியும் புல்லிங்கோ கூட்டம்...இதுகளை நம்பி ஒரு தலைவன்...கருமம் கருமம்


ஆரூர் ரங்
ஆக 22, 2024 16:42

அதென்ன அதில் ஆப்பிரிக்க யானையின் படம்? பூர்வீகம் அதுதானோ?


God yes Godyes
ஆக 22, 2024 16:38

இந்த பையனை தூண்டி விட்டவன் பலே கில்லாடி பாவாடை.இயேசு பூமிக்கு வர்ரார்னு சொல்லி சைதாபேட்டை சுவர்களில் பாவாடைகள் ஒட்டிய போஸ்டர் கிழிஞ்சு கழுதை சாப்பிட்டது தான் மிச்சம்.இன்னும் யேசு பூமிக்கு வந்த பாடில்லை.


Rajah
ஆக 22, 2024 16:11

இது ஒரு ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். முடிவு மக்கள் கையில். தலைவர் அண்ணாமலை அவர்கள் "பிஜிபியோடு கூட்டணி வைக்க விஜே கட்சி விரும்பினால் வரவேற்போம்" என்று கூறியிருந்தார். திராவிட கட்சிகளை எதிர்ப்பதற்கு இது நல்லதென அண்ணாமலை அவர்கள் கருதுகின்றார். இதில் தவறில்லை. ஆகவே விஜேபி தொண்டர்கள் அண்ணாமலை அவர்களின் முடிவுக்கு எதிராக கருத்து வெளியிட வேண்டாம் என்று ஒரு விஜேபி தொண்டனாக கேட்டுக்கொள்கின்றேன். நன்றி


Sivagiri
ஆக 22, 2024 14:14

ஐயோ பாவம்தான் - -


Sivagiri
ஆக 22, 2024 14:13

படத்துக்கு பூஜை போட்டாச்சு , - - - டைட்டில் வச்சாச்சு - - டைரக்டர் ரெடி , ஹீரோ - - அதை பத்தி கவலை இல்லை இவரே ஆக்ட் பண்ணிக்குவார் - - இப்போ லோகோ- - பர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரெடி , , , இந்த கதை - கதை - அது ஒண்ணுதான் பாக்கி , சூடான பொலிட்டிகல் - கதை எங்க எழுதிக் கொடுக்கிறாங்கன்னு தேடிக்கிட்டிருக்காங்க . .. அநேகமா பீஹார்-காரரிடம்தான் கான்டராக்ட் போடுவாங்க போல . . . எல்லாம் ரெடி ஆகுறதுக்கு கொஞ்சம் டைம் ஆகும் போல - அப்புறம்தான் ஷூட்டிங் . .. ஆமா ஷூட்டிங் போயிட்டு இதெல்லாம் யோசிச்சிக்கிட்டு இருக்க முடியாதே , மீடியாக்காரன் குடைஞ்சு எடுத்திருவானே . .


மேலும் செய்திகள்