உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சதி செய்து என்னை தோற்கடித்து விட்டனர் சிவகாசியில் விஜய பிரபாகரன் பேச்சு

சதி செய்து என்னை தோற்கடித்து விட்டனர் சிவகாசியில் விஜய பிரபாகரன் பேச்சு

சாத்துார்:''விருதுநகர் தொகுதியில் என்னை சதி செய்து தோற்கடித்து விட்டனர்,'' என சிவகாசியில் நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில், தே.மு.தி.க., வேட்பாளராக போட்டியிட்ட விஜயபிரபாகரன் தெரிவித்தார்.விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் வாக்காளர்களுக்கு நன்றி கூறி அவர் பேசியதாவது:லோக்சபா தேர்தலில் இந்தியா முழுதுமே ஓட்டு எண்ணிக்கை நடந்து உடனுக்குடன் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. ஆனால் விருதுநகர் தொகுதியில் மட்டுமே மிகவும் தாமதமாக முடிவு அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் சதி செய்து என்னை தோற்கடித்து விட்டனர்.இவ்வாறு அவர் பேசினார்.பின்னர் சாத்துார் பந்துவார்பட்டி குரு ஸ்டார் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியான நான்கு பணியாளர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய பின் அவர் கூறியதாவது:பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து தொடர் கதையாக உள்ளது. உயிர்கள் பலியாவதை தடுக்க நிரந்தர தீர்வு வேண்டும். கள்ளச்சாராயத்தை தி.மு.க., ஆதரிப்பதால் தான், 10 லட்சம் ரூபாய் கொடுத்து மூடி மறைக்க பார்க்கின்றனர்.தேசிய கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் முதல்வரின் தொகுதியான கொளத்துாரில் நடந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்து 500 மீட்டர் துாரத்தில் போலீஸ் ஸ்டேஷன் உள்ளது.தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. பட்டாசு விபத்தில் பலியான தொழிலாளர்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ