உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏப்., 19ல் இலவச பஸ் விட்டால் ஓட்டு சதவீதம் அதிகரிக்கும்

ஏப்., 19ல் இலவச பஸ் விட்டால் ஓட்டு சதவீதம் அதிகரிக்கும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : ஓட்டுப்போட சொந்த ஊர்களுக்கு சென்றுவர, குறைந்த பஸ் கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு, தேர்தல் ஆணையத்திற்கு, வாக்காளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை, செங்கல்பட்டு, கோவை போன்ற தொழிற்சாலைகள் அதிகம் உள்ள நகரங்களில், வேலைக்காக வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். வரும், 19ல் லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதனால், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.ஓட்டுப்போட வசதியாக, வெளியூர்களில் வசிப்போர் சொந்த ஊர்களுக்கு செல்ல கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக, போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது. இது, அதிக பயனை தராது என்றும், குறைந்த பஸ் கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஆணையத்திற்கு பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, வாக்காளர்கள் கூறியதாவது:

மதுரை, தேனி, ராமநாதபுரம், கன்னியாகுமரி போன்ற தென்மாவட்டங்களுக்கு அரசு பஸ்சில் சென்று ஓட்டுப்பதிவு செய்து விட்டு சென்னை திரும்ப, குறைந்தது, 2,000 ரூபாய் செலவாகும். இதை விட, ஆம்னி பஸ்களில் அதிகம் செலவாகும். மாதம், 40,000 ரூபாய் ஊதியத்தில் பணிபுரியும் ஊழியர்களால், சொந்த ஊர் செல்வது சிரமம். பஸ் கட்டணத்திற்கு செலவு செய்யத் தயங்கியே ஓட்டுப்போட சொந்த ஊர் செல்வது கிடையாது. இலவச பஸ் சேவை கேட்டால், ஆளுங்கட்சிக்கு சாதகமாகும் என, தேர்தல் ஆணையம் பதில் அளிக்கும். எனவே, ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாள், ஓட்டுப்பதிவு தினத்தில், 200 ரூபாய்க்குள் திருச்சி வரை போக, வரவும்; 500 ரூபாய்க்குள் கன்னியாகுமரி வரை சென்று, வரவும் அனுமதிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் பலரும் சொந்த ஊர் செல்வர். ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாளே, அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் விடுமுறை அறிவிக்க வேண்டும். இதனால், வழக்கத்தை விட அதிக ஓட்டு சதவீதம் உறுதியாக அதிகரிக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Arul Narayanan
ஏப் 14, 2024 14:16

அதை விட அவர்களுக்கு மட்டும் மிகவும் பாதுகாப்பான முறையில் ஆன்லைன் ஓட்டுப்பதிவை அனுமதிக்கலாம் முதலில் தபால் ஓட்டுகளை அந்த முறையில் பதிவு செய்து பரிசோதனை செய்யலாம்


senkm
ஏப் 14, 2024 14:07

Election commission shall think positively for % vote and also think those who are in outside from their native for vote, than only the % of vote will be improve


கண்ணன்
ஏப் 14, 2024 13:31

வேலை செய்வது சென்னையில். ஆனால் வாக்காளர்களாக பதிவு செய்து இருப்பது தென் மாவட்டங்களில். இந்த முறை ஒழிக்கப்பட வேண்டும். எங்கு நிரந்தரமாக வசிக்கிறார்களோ அங்குதான் வாக்காளர்களாக பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். தென் மாவட்டக்காரரின் தொல்லை தாங்கமுடிய வில்லை.


Cheran Elumalai
ஏப் 15, 2024 12:28

பிஜேபி தேர்தல் அறிக்கையில் இதையே சொல்லி இருக்கிறார்கள் கவலை வேண்டாம்


Nanda Kumar
ஏப் 14, 2024 06:14

excellent plan


Mani . V
ஏப் 14, 2024 05:59

இலவச பஸ் விட்டால் ஓட்டு சதவீதம் அதிகரிக்கும் என்று நம்பும் மண்ணு மூட்டைகளை நினைத்தால் பரிதாபம்தான் மேலிடுகிறது ஓசி பஸ்ஸில் ஏறி ஊர் சுற்றுவானுங்களே அன்றி, ஓட்டுப் போட போகமாட்டானுங்க மக்களின் வரிப்பணம் விரயமாவப் போவது மட்டும் திண்ணம்


Suresh Kesavan
ஏப் 14, 2024 10:34

உண்மை உண்மை


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை