உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளுக்கடை திறப்பதில் என்ன பிரச்னை: கோவையில் அண்ணாமலை கேள்வி

கள்ளுக்கடை திறப்பதில் என்ன பிரச்னை: கோவையில் அண்ணாமலை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: தமிழ்நாட்டில் 100 சதவீதம் கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும், என அண்ணாமலை தெரிவித்தார்.கோவை பார்லிமென்ட் தொகுதி கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் நீலாம்பூரில் நடந்தது. இதில் பங்கேற்க வந்த, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:சட்டசபையில், அமைச்சர் துரைமுருகன், நகைச்சுவையாக குறிப்பிட்டாலும், அவர் பேசியதில் உண்மை இருக்கிறது. கள்ளக்குறிச்சியில் நான் விசாரித்த போது, டாஸ்மாக் சரக்கின் தரம், தண்ணீரைப் போல தான் உள்ளது. சரியான விகிதத்தில் ஆல்கஹால் கலக்கப்படுவதில்லை; போதை அதிகம் வேண்டும் என்றால், கஞ்சா, அபின் கள்ளச்சாராயத்தை நோக்கி குடிகாரர்கள் திரும்பியுள்ளனர்.'தமிழ்நாட்டின் டாஸ்மாக் வருமானம் வெளிப்படையாக இல்லை' என, சி.ஏ.ஜி., அறிக்கை தெரிவித்துள்ளது. டாஸ்மாக் நிறுவனத்திற்கு யார் சப்ளை செய்கிறார்கள் என்பது தெரியாது. அதற்கு தர நிர்ணயம் இல்லை. இதற்கும் தமிழக அரசுதான் பொறுப்பு.மூத்த அமைச்சரே சட்டசபையில் உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார். அரசு செய்ய வேண்டிய வேலையை செய்யவில்லை; தவறாக செய்கிறது, என்பதை துரைமுருகன் சொல்லி இருக்கிறார்.தேர்தல் பணியாற்றிய போலீசாருக்கு இன்னும் சிறப்பு ஊதியம் வழங்கப்படவில்லை. சட்டசபையில் அரசு அறிவிக்கும் என எதிர்பார்த்தும் நடக்கவில்லை. தமிழகத்தில் மட்டும்தான் ஒரு முதலமைச்சர் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை கொடுக்காமல், சென்று வருகிறார். வெளிநாடுகளுக்கு சென்று எவ்வளவு நிதி திரட்டி உள்ளார். துபாய், சிங்கப்பூர் சென்று கொண்டு வந்த முதலீட்டில் எவ்வளவு வேலை வாய்ப்பு உருவாகி இருக்கிறது என்பது தெரியவில்லை.முதலமைச்சர் தொடர்ந்து, வெளிநாட்டு பயணம் செல்வதன் மர்மம் என்பது என்ன என்பதுதான் பொதுமக்களின் கேள்வி.ஒரு வெளிநாட்டு நிறுவனம் முதலீடு செய்ய, இங்கு சட்டம், ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும். அதிகார மையம் கூடாது. இவை இங்கு இல்லை.டாஸ்மாக்கை படிப்படியாக குறைக்க வேண்டும். தமிழகத்தில் 100 சதவீதம் கள்ளுக்கடையை திறக்க வேண்டும். அதில் என்ன பிரச்னை என்பதை ஏன் சொல்வதில்லை. கள்ளு கடைகளை திறப்பதால், அந்நிய நாட்டு மதுபான விற்பனை குறையும். அதன் முதலாளிகளாக உள்ள தி.மு.க.,வினர் பாதிக்கப்படுவர்.இலவச சைக்கிள் வாங்கும் துறை உதயநிதியிடம் உள்ளது. ஒவ்வொரு குழந்தையும் 400 ரூபாயிலிருந்து 600 ரூபாய் செலவு செய்தால் மட்டுமே, அந்த சைக்கிளை ஓட்ட முடியும். தரமற்ற சைக்கிள் வழங்கி உள்ளது உண்மைதான். சப்ளை செய்த நிறுவனத்தை 'பிளாக் லிஸ்ட்' செய்ய வேண்டும்.இவ்வாறு, அண்ணாமலை தெரிவித்தார்.

வெள்ளை அறிக்கை வேண்டும்

அண்ணாமலை மேலும் கூறியதாவது:நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்ய, தேசிய தேர்வு முகமை தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நீட் தேர்வு அவசியம் தேவை. அதிக மாணவர்கள் அரசு கல்லூரியில் சேர நீட் அவசியம்.அரசு பள்ளிகளில் இருந்து, எத்தனை பேர் அரசு கல்லூரிகளுக்கு சென்றனர் என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மீண்டும், மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்புவதில் எவ்வித பிரயோஜனமும் இல்லை. 'நீட்' தேர்வால் அடித்தட்டு மக்கள் பயனடைந்து வருகின்றனர். நீட் தேர்வு ரத்து என்பது நாடகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

கிருஷ்ணன் (எ) ரவி
ஜூலை 01, 2024 13:52

கள்ளுக்கடைய கொண்டு வந்திட்டா குடும்ப மற்றும் கட்சியினர் வைச்சிருக்கும் ஆலைகளை என்ன செய்யுறது?


MADHAVAN
ஜூலை 01, 2024 11:45

குடிகாரபசங்களை திருத்துவதற்கு வழி இருந்தா சொல்லுங்க, சாராய கடை. கள்ளுக்கடை எல்லாம் இருந்தாலும் நல்லவழில இருக்குற மக்களை முன் உதாரணமாக சொல்லுங்க, அரசாங்கத்தை குறை சொல்லுவது மிக சுலபம், குடிகாரப்பசங்களை கண்டவுடன் அடிக்கச்சொல்லுங்க, திருந்துவானுங்க,


rao
ஜூலை 01, 2024 10:02

The reason for not permitting the opening of toddy shops are loss of revenue in TASMAC sales and to distilleries owned by politicians in the ruling party.


ram
ஜூலை 01, 2024 09:57

Factory எல்லாத்தையும் மூடிட்டு.. பல கோடி வருமாணம்.. அதனாலே.. டாஸ்மாக் மூடிட்டா மக்கள் மென்டல் ரீதியா பாதிக்கப்படுவாங்க.. இறந்துடுவாங்க.. இப்படியெல்லாம் நாங்க பொது மேடையிலே.. வாய் கிழிய கத்திட்டு.. அதை உண்மையின்னு நாங்களே நிரூபித்துக்காட்டுவோம்... ஏன்னா பணம் கொடுத்தா எதையும் ஏற்றுக்கொள்ள ஆள் இருக்கே..


ديفيد رافائيل
ஜூலை 01, 2024 09:12

கள்ளுக்கடை திறந்தா Tasmac earnings போய்டுமே....


Svs Yaadum oore
ஜூலை 01, 2024 08:51

எழுபது நபர்கள் செத்தாலும் குடிப்பவன்தான் காரணம் என்று சாராய கடைகளை திறந்து கொண்டே இருப்பார்கள் .....இந்த நேரத்தில் ஹாப்பி ஸ்ட்ரீட் என்று ஆணும் பெண்ணும் நடு ரோட்டில் ஆட விடுவது ....அதன் இடையே வான வில் என்று கலாச்சார சீரழிவு....அதை அரசு மாதிரி பள்ளியில் நடத்த போகிறார்களாம் ..சைதாப்பேட்டையில் சாக்கடை தண்ணீர் கலந்து குடிதண்ணீர் அதில் சிறுவன் இறப்பு .....ஆனால் சென்னை கார்பொரேஷன் அலுவலகம் வான வில் கலரில் நேற்று ஜொலிக்குது ...படு கேவலமான ஆட்சி ...


pmsamy
ஜூலை 01, 2024 07:56

பாஜக வினருக்கு கல்லு தில்லு முல்லு இதெல்லாம் ரொம்ப பிடிக்கும் போல இருக்கு


sridhar
ஜூலை 01, 2024 07:12

தெரிந்து தான் இப்படி கேட்கிறாரா, திமுகக்காரர்கள் சாராய ஆலை தானே வைத்திருக்கிறார்கள், அந்த பிசினஸ் நல்லா இருக்கணும்னா டாஸ்மாக் தான் இருக்கணும்.


Rajalakshmi
ஜூலை 01, 2024 06:51

ஏன் இலவச சைக்கிள்கள் வழங்குவது ? உசத்தியான bicycles இலவசமாக அளிக்க இயலாது . Nothing is free. Someone’s earnings get siphoned to bear the cost of freebies.


Svs Yaadum oore
ஜூலை 01, 2024 06:35

நீட் தேர்வு வினாத்தாள் மூலம் நடத்தினால் அது லீக் ஆகி பல பிரச்சனைகள் உருவாகுது ....இனி ஆன்லைன் மூலம் நடத்த தேசிய தேர்வு முகமை முடிவு ....இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் CBI மூலம் கைது செய்து உள்ளே ...தமிழ் நாட்டில் குரூப் 4 பணியிடங்கள் தேர்வுக்கு 20 லட்சம் நபர்கள் தேர்வு எழுதும் நிலைமை ....இந்த தேர்வில் நடந்த ஏகப்பட்ட முறைகேடுகள் பற்றி விசாரிக்க பாட்டாளி அறிக்கை.... தமிழ் நாட்டில் ஒரு சாதாரண சர்வீஸ் கமிஷன் தேர்வு கூட சரியாக நடத்த கூட இந்த விடியலுக்கு வக்கில்லை ....இந்த லட்சணத்தில் மத்திய அரசை குறை சொல்வார்களாம் ....


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை