உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இண்டியா கூட்டணியினர் மவுனம் ஏன்?: எல்.முருகன் பேட்டி

இண்டியா கூட்டணியினர் மவுனம் ஏன்?: எல்.முருகன் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் குறித்து இண்டியா கூட்டணியினர் பேசாதது ஏன்?. தமிழகத்தில் நடப்பது திமுக ஆட்சி என்பதால் மவுனமா?' என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.பார்லிமென்ட் வளாகத்தில் நிருபர்கள் சந்திப்பில் எல்.முருகன் கூறியதாவது: பிரதமர் மோடி அரசியலமைப்பு சட்டம் மீது எப்போதும் மரியாதை மற்றும் நம்பிக்கை வைத்துள்ளார். இண்டியா கூட்டணி கட்சிகளின் செயல்பாடு துரதிர்ஷ்டவசமானது. தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 58 பேர் இறந்துள்ளனர். அது பற்றி காங்கிரஸ் தலைவர்கள் வாயை திறக்க மறுக்கிறார்கள். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=299gws05&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

சமூக நீதி

இண்டியா கூட்டணி கட்சிகளின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் நடப்பது திமுக ஆட்சி என்பதால் மவுனமா?. இவர்கள் அரசியல் அமைப்பு சட்டம் மற்றும் சமூக நீதி பற்றி பேசுகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் இதுவரை பாதிக்கப்பட்ட இடத்துக்கு செல்லவில்லை. அதனால் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சி.பி.ஐ., விசாரணை கோரினார். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

கோபன்
ஜூன் 24, 2024 22:02

இது பற்றி பிரதமர் மௌனம் ஏனாம்? 140 கோடி பேரும் என் பந்துக்ஜள்ன்னு அடுச்சி உட்டது யாரு?


Easwar Kamal
ஜூன் 24, 2024 21:51

இது ஒரு காமெடி பீஸ் மேலே உள்ளவனுங்க ஏதாவது சொன்னானுங்கன இங்க வந்து உலர வேண்டியது. இல்லாட்டி படுத்து தூங்க வேண்டியது.


அரசு
ஜூன் 24, 2024 19:45

சிபிஐ விசாரணை நடத்தி வரும் பல விஷயங்களில், பல ஆண்டுகளாக முடிவு எட்டப்படவில்லை. சிபிஐ மட்டும் என்ன வானத்தில் இருந்து குதித்து வந்தவர்களா?


Ms Mahadevan Mahadevan
ஜூன் 24, 2024 17:59

இதுதான் நல்ல சமயம். எதிர் கட்சிகள், கூட்டணி கட்சிகள் சேர்ந்து பூரண மதுவிலக்கு வலியுறுத்த வேண்டும்


thangavel
ஜூன் 24, 2024 17:10

ரயில் மந்திரி ராஜினாமா. செஞ்சாரா


Mario
ஜூன் 24, 2024 17:00

மணிப்பூர் போக சொல்லுங்க சார்


கனோஜ் ஆங்ரே
ஜூன் 24, 2024 15:50

மணிப்பூர் கலவரம் நடந்தப்ப... உங்க கூட்டணிக் கட்சிகள் மவுனம் இருந்தார்களே.... அதுபோலத்தான், இவங்களுக்கும் மவுனமா இருக்காங்கோ மத்திய இணையமைச்சர் அவர்களே... உ


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 24, 2024 17:09

மணிப்பூர் பிரச்னையையும், கள்ளச்சாராய பலிகள் பிரச்னைகளையும் ஒரே விதமாக நினைத்து பேசும், எழுதும் அளவுக்குத்தான் திமுக


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை