உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாநில உணவு ஆணையம் அமைப்பதில் ஏன் தாமதம்?

மாநில உணவு ஆணையம் அமைப்பதில் ஏன் தாமதம்?

சென்னை: மாநில உணவு ஆணைய தலைவரை நியமிக்க, ஓராண்டுக்கு மேலாக அரசு தாமதம் செய்வதாக புகார் கூறப்படுகிறது. தமிழகத்தில் உணவு ஆணையராக, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி வாசுகி இருந்தார். இவர் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து, ரேஷன் கடைகளில் ஆய்வு செய்தார். ரேஷன் கார்டு உள்ளிட்ட சேவைகளில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், மக்களின் கோரிக்கைகளை செயல்படுத்தவும், அரசுக்கு பரிந்துரை செய்தார். கடந்த 2023 பிப்ரவரியில் அவர் ஓய்வு பெற்றார். அதையடுத்து அந்த ஆணையம் காலாவதியானது. புதிய தலைவரை தேர்வு செய்ய, கடந்த ஜனவரியில் அரசு விண்ணப்பம் பெற்றது. இதற்கு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் உட்பட பலர் விண்ணப்பித்தனர். ஓராண்டுக்கு மேலாகியும், இதுவரை உணவு ஆணைய தலைவரை அரசு நியமிக்கவில்லை. இதனால், ரேஷன் சேவைகளால் பாதிக்கப்பட்டு ஆணையத்தில் புகார் அளிக்க செல்வோர், ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விரைவில் ஆணைய தலைவரை நியமிக்குமாறு, பலரும் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ