உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மனைவி கொலை; கணவர் வெறிச்செயல்

மனைவி கொலை; கணவர் வெறிச்செயல்

திருச்சி : திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உப்பிலியபுரம் கோணக்கரையை சேர்ந்தவர் சிவகுமார், 55. இவரது மனைவி செங்கொடி, 43. இவர்களுக்கு திருமணமாகி, 24 ஆண்டுகள் ஆகிறது. காசநோயால் பாதிக்கப்பட்ட சிவகுமார் வீட்டில் இருந்து வருகிறார். மனைவி நடத்தையில் சந்தேகமடைந்து, அடிக்கடி அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் தம்பதி இடையே வழக்கம் போல தகராறு நடந்தது. ஆத்திரமடைந்த சிவகுமார், செங்கொடியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தார். உப்பிலியபுரம் போலீசார் சிவகுமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை