உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமேஸ்வரம் கடலில் வீசப்பட்ட 10 கிலோ கடத்தல் தங்கம்; தேடும் பணியில் ஸ்கூபா டைவிங் வீரர்கள்

ராமேஸ்வரம் கடலில் வீசப்பட்ட 10 கிலோ கடத்தல் தங்கம்; தேடும் பணியில் ஸ்கூபா டைவிங் வீரர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே வேதாளை கடலில் இலங்கையில் இருந்து படகில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ தங்கக்கட்டிகளை கடத்தல்காரர்கள் வீசி விட்டு தப்பினர். அந்த தங்கக்கட்டிகளை இந்திய கடலோர காவல் படையின் ஸ்கூபா டைவிங் வீரர்கள் கடலுக்குள் தேடி வருகின்றனர்.இலங்கையில் இருந்து மன்னார் வளைகுடா கடல் வழியாக மண்டபம் வேதாளைக்கு தங்கக்கட்டிகள் சிலர் கடத்தி வருவதாக திருச்சி மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல் படையினரிடம் அவர்கள் தெரிவித்தனர். நேற்று அதிகாலை சந்தேகத்திற்கிடமான பைபர் கிளாஸ் படகு ஒன்று மண்டபம் வேதாளை கடற்கரை நோக்கி வந்தது. அப்போது இந்திய கடலோரக் காவல் படை ரோந்துக் கப்பலில் இருந்த வீரர்கள் படகை மடக்கினர். படகில் இருந்த ஒரு கடத்தல்காரர் தங்க கட்டிகளை கடலில் வீசி விட்டு கடலில் குதித்து நீந்தி தப்பினார். மேலும் படகில் இருந்த இரண்டு கடத்தல்காரர்களை இந்திய வீரர்கள் கைது செய்தனர். கடத்தல்காரர்களிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் கடலில் வீசப்பட்ட 10 கிலோ தங்கக்கட்டிகளை ஸ்கூபா நீச்சல் பயிற்சி பெற்ற இந்திய வீரர்கள் மூலம் கடலோர காவல் படையினர், மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் தேடி வருகின்றனர். அதன் மதிப்பு ரூ.6.25 கோடியிருக்கும் என புலனாய்வுத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை