உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லாரி மீது பைக் மோதல் மாணவர்கள் 3 பேர் பலி

லாரி மீது பைக் மோதல் மாணவர்கள் 3 பேர் பலி

மாத்துார்:சென்னை, தண்டையார்பேட்டையை சேர்ந்த வல்லரசு, 20, அரியலுார் மாவட்டம், சன்னாசிநல்லுார் லெனின், 21, ஆத்துார் ரெங்கநாதன், 21, ஆகிய மூவரும் திருச்சி பாரதிதாசன் பல்கலை விடுதியில் தங்கி மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்தனர்.மூவரும் நேற்று அதிகாலை, பல்கலை விடுதியில் இருந்து பைக்கில் புதுக்கோட்டை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாத்துார் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.அப்போது, மாத்துார் போலீஸ் ஸ்டேஷன் எதிரே சென்ற போது, எதிரே திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வேலுாரை சேர்ந்த கோபி, 31, என்பவர் ஓட்டிச்சென்ற சிமென்ட் லாரி மீது பைக் மோதியது. இதில், துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த மூன்று பேரும், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். மாத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி