உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆறில் ரெண்டு கொடுங்க: திமுக.,விடம் கேட்கும் மதிமுக

ஆறில் ரெண்டு கொடுங்க: திமுக.,விடம் கேட்கும் மதிமுக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திமுக கூட்டணியில் லோக்சபா தேர்தலில் போட்டியிட 6 தொகுதிகள் அடங்கிய பட்டியலை அளித்துள்ள மதிமுக, அதில் 2 தொகுதிகளை ஒதுக்குமாறு திமுக.,விடம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து முடிவெடுக்க திமுக.,வில் டி.ஆர்.பாலு தலைமையிலான 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் முதல்கட்டமாக காங்கிரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், இன்று மதிமுக உடன் பேச்சு நடத்தியது.கடந்த முறை ஈரோடு தொகுதியில் மட்டும் போட்டியிட்ட மதிமுக, இம்முறை 2 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் கடந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட நிலையில், இம்முறை பம்பரம் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதற்காக விருதுநகர், திருச்சி, கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை ஆகிய 6 தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுக.,விடம் வழங்கிய மதிமுக, அதில் 2 தொகுதிகளை ஒதுக்குமாறு கோரியுள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை