உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "தடுப்பணை கட்ட முயற்சி செய்யும் கேரள கம்யூனிஸ்ட் அரசு": இ.பிஎஸ்., கண்டனம்

"தடுப்பணை கட்ட முயற்சி செய்யும் கேரள கம்யூனிஸ்ட் அரசு": இ.பிஎஸ்., கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன் மூலம் அமராவதி அணைக்கு வரும் நீரை தடுக்க, கேரள கம்யூனிஸ்ட் அரசு முயற்சி செய்கிறது' என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் கூட்டணி ஆதாயத்திற்காக கள்ள மவுனம் சாதித்து, தமிழகத்தின் நதிநீர் உரிமைகளை மொத்தமாக அண்டை மாநிலங்களுக்கு அடகு வைத்துக்கொண்டிருக்கும் திமுக அரசின் முதல்வர் ஸ்டாலினின் நிர்வாக திறனற்ற ஆட்சியில் பாலாற்றில் ஆந்திர அரசு பல தடுப்பணைகளை கட்டியுள்ளது. மேகதாதுவில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட முயற்சித்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ixxxaw94&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

கேரள கம்யூனிஸ்ட் அரசு

இந்நிலையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெருகுடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன் மூலம் அமராவதி அணைக்கு வரும் நீரை தடுக்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசின் முயற்சிக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இனியாவது திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின் தூக்கத்தில் இருந்து விடுபட்டு தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட உடனடியாக சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

krishnan
மே 19, 2024 22:32

எல்ல மாநிலமும் தங்கள் வசம் இருக்கும் அனை தடுப்பணை எல்லாவற்றையும் உடைக்க வேண்டும் எல்ல தண்ணீரும் தமிழருக்கே நாம மழை காலத்தில வர தண்ணிய கடலுக்கு பாய்ச்சுவோம் ஊதாரிய வெள்ள கால நீரை செலவு செய்வோம்அண்டை மாநிலங்கள் தமிழருக்கு வேலை தரணும் , தண்ணீ தரணும் நாங்க மது , மாமிசம் , பீடி தருவோம் சோம்பேறி யாக இருப்போம்


P. VENKATESH RAJA
மே 19, 2024 19:03

கண்டன நடத்தினால் மட்டும் போதாது போராட்டம் நடத்துங்கள் எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி அவர்களே


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை