உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "ஸ்மார்ட் கார்டை பரிசோதிக்கும் ரீடர் கருவி வழங்குவதில் இழுபறி

"ஸ்மார்ட் கார்டை பரிசோதிக்கும் ரீடர் கருவி வழங்குவதில் இழுபறி

சிவகங்கை : மோசடிகளை தவிர்க்க அரசு கொண்டு வந்த 'ஸ்மார்ட் கார்டு' திட்டத்தில் ரீடர் கருவி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு ஓட்டுனர் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழை 'ஸ்மார்ட் கார்டு' மூலம் வழங்கும் திட்டத்தை சென்னை (தெற்கு), கடலூர், சிவகங்கை உள்ளிட்ட இடங்களில் 2008ல்அறிமுகம் செய்தது. போக்குவரத்து துறையினரால் வழங்கப்பட்ட 'ஸ்மார்ட் கார்டை' கம்ப்யூட்டர் உதவியுடன் மட்டுமே கண்டறியக் கூடிய வகையில் பிரின்ட் செய்யப்பட்டிருந்ததால், போலி ஓட்டுனர் உரிமங்கள் மற்றும் மோசடிகள் செய்வதை தடுக்கும் வகையிலும், தகவல்களை அழிக்க முடியாத வகையிலும், கார்டில் குறிக்கப்பட்டுள்ள தகவல்களை ரீடர் கருவியால் கண்டறியும் வகையில் தயாரிக்கப்பட்டிருந்தது.

பதிவு செய்த தகவல்களை படிக்க அனைத்து அமுலாக்க பிரிவு அதிகாரிகளுக்கும் ரீடர் வழங்கப்படும் என, இத்திட்ட அறிமுகம் செய்தபோது அறிவிக்கப்பட்டது. இந்த 'ஸ்மார்ட் கார்டை' பெற்ற டிரைவர்கள் தமிழகத்தில் வழங்கப்பட்ட மூன்று மாவட்டங்கள் தவிர இதர மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு செல்லும் போது, அதிகாரிகள் கார்டில் உள்ள விவரங்களை படித்து தெரிந்து கொள்ள முடியாததால் பிரச்னை ஏற்பட்டது.

அதிகாரிகளுக்கும், டிரைவர்களுக்கும் இடையே பிரச்னை எழுந்தது. இப்பிரச்னையை தீர்க்க, அமலாக்க அதிகாரிகளுக்கு ரீடர் கருவி வழங்க மாநில அளவில் டெண்டர் விடப்பட்டு, ரீடர் கருவி தயாரிக்கும் பணி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு துவங்கியது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், இப்பணிகள் முழுமையடையாமல் பாதியில் நின்றுவிட்டது. வட்டார போக்கு வரத்து அலுவலர் ஒருவர் கூறுகையில், 'ஸ்மார்ட் கார்டை' பரிசோதனை செய்ய வசதியாக அனைத்து அலுவலகங்களுக்கும் ரீடர் வழங்க, மாநில அளவில் டெண்டர் எடுத்து ரீடர் கருவி தயாரிக்கும் பணி முடிவடைந்துள்ளது. ரீடர் கருவியை வினியோகம் செய்ய உத்தரவு வராததால் திட்டம் கிடப்பில் உள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை