உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் 2 தொகுதிகளுக்கு 7 பேர் பரிந்துரை

இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் 2 தொகுதிகளுக்கு 7 பேர் பரிந்துரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : திருப்பூர், நாகப்பட்டினம் ஆகிய இரு தொகுதிகளுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் வேட்பாளர் தேர்வு செய்யும் நிர்வாக குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.மாநில செயலர் முத்தரசன் தலைமையில் நடந்த நிர்வாக குழு ஆலோசனை கூட்டத்தில், 31 பேர் பங்கேற்றனர். இதில், திருப்பூர் தொகுதிக்கு ஈரோடு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பாப்பா மோகன், ரவி, ஸ்டாலின் குணசேகரன், மாநில துணை செயலர் பெரியசாமி, தற்போதைய எம்.பி., சுப்பராயன் ஆகியோரை மாவட்ட குழு பரிந்துரை செய்துள்ளது.அதேபோல, நாகப்பட்டினம் தொகுதியில் தற்போதைய எம்.பி., செல்வராஜ், மாவட்ட செயலர் செல்வராஜ், லெனின், ராஜா ஆகியோர் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு பேர் சிட்டிங் எம்.பி.,க்கள். ஏழு பேர் புதுமுகங்கள்.கட்சி விதிகளின்படி, இரண்டு முறைக்கு மேல் ஒரு நிர்வாகி தேர்தலில் போட்டியிடக்கூடாது என்பதாலும், 70 வயதுக்கு மேற்பட்டவர், மற்றவர்களுக்கு வழிவிட்டு, கட்சி பொறுப்பிலும் இருக்கக்கூடாது என்பதாலும், இரண்டு தொகுதிக்கும் புதுமுகங்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.அக்கட்சியின் நிர்வாக்குழு கூட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது. இதில் வேட்பாளர் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

M Ramachandran
மார் 18, 2024 12:13

எப்போது கட்டுப்பாடற்ற கட்சியாகா மாறியது ?


Ramanujadasan
மார் 18, 2024 11:39

இந்த செய்தியின் மூலம் உண்டியல் மூலமும், கூட்டணி மூலம் பிச்சை எடுப்பவர்கள் தமிழகத்தில் ஏழு பேர் என தெரிகிறது


Paraman
மார் 18, 2024 11:21

உள்ளூரிலேயே டீ குடித்து கொள்ள வேண்டியது தான்


பேசும் தமிழன்
மார் 18, 2024 08:55

உண்டியல் குலுக்கிகள் இந்த நாட்டை பிடித்த சாபக்கேடு...அவர்கள் இந்த நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட வேண்டும்..... காசு வாங்கி கொண்டு கூவும் கம்மிகள்.


Ramanujadasan
மார் 18, 2024 11:38

சீனாவின் கைக்கூலிகள், சொந்த தாய் நாட்டை காட்டி கொடுக்க தயங்காத துரோகிகள்


RAJ
மார் 18, 2024 08:23

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி இன்னும் உயிரோடு இருக்கிறதா? இன்னும் தங்களை நம்பி வாக்களிக்கும் மக்களை நினைத்து வருத்தமாக இருக்கிறது. சீன அடிமைகள் . ஹஹஹா.


THAMIRAMUM PAYANPADUM
மார் 18, 2024 09:31

avargalukku vakku aliththu irnthaal inru china pola munertram adithu iruppom


duruvasar
மார் 18, 2024 08:04

முதலாளியிடம் காசு வராமல் இந்த கும்பகர்ணன் எந்த முடிவையும் எடுக்கமாட்டார். இது ஒரு கட்சி இவனுங்களுக்கு ஒரு கொள்கை.


sankar
மார் 18, 2024 08:02

சீன அடிவருடிகள்


மேலும் செய்திகள்