உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு புதிதாக 75 வாகனங்கள்

108 ஆம்புலன்ஸ் சேவைக்கு புதிதாக 75 வாகனங்கள்

சென்னை:தமிழகத்தில் '108' ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்த, புதிதாக வாங்கப்பட்டுள்ள 75 வாகனங்கள் மற்றும் 98 நவீன செயற்கை சுவாசக் கருவிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, நேற்று முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.l மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில், அதிகனமழையின் போது சிறப்பாக பணியாற்றிய, '108' ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மோகன், ராஜா, அரவிந்த்குமார், சந்தனமாரியப்பன் ஆகியோருக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.l யோகா மற்றும் இயற்கை மருத்துவ நிலையங்களில், காலியாக உள்ள 59 சிகிச்சை உதவியாளர் பணியிடங்களுக்கு, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஐந்து பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்